14/04/2025
Selamat Tahun Baharu Chithirai, Hari Vaisakhi dan Vishu saya ucapkan kepada semua masyarakat Tamil, Sikh dan komuniti Malayalee yang meraikannya.
Semoga tahun baharu ini membawa lebih banyak kegembiraan, kesihatan yang baik dan keberkatan buat anda semua.
Kita raikan kepelbagaian ini dengan rasa bangga, kerana inilah warna-warni Malaysia yang menjadikan negara kita unik dan kuat. Teruskan semangat perpaduan, itulah kekuatan sebenar kita.
Kerajaan akan terus memperhebatkan inisiatif bagi memberdayakan komuniti India di negara ini melalui pelbagai program termasuk pembiayaan perniagaan komuniti India selain menambah baik semua aspek penting termasuk pendidikan, penyediaan rumah ibadat dan peluang pekerjaan.
Ini penting dalam merealisasikan hasrat memartabat masyarakat India di negara ini sekaligus meningkatkan taraf sosioekonomi masyarakat India pada masa hadapan.
==
இனிய சித்திரைப் புத்தாண்டு, வைசாகி & விஷு புத்தாண்டு வாழ்த்தினை, இந்நாட்டில் உள்ள தமிழ், சீக்கிய, மலையாளி அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பினைக் கொண்டுவரட்டும்.
இந்நாட்டில் நாம் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் கொண்டாடுகிறோம். இதுவே நமது நாட்டைத் தனித்துவமாகவும் வலிமையாகவும் காட்டுகின்றது. இந்நாட்டில் உள்ள அனைவரும் பரஸ்பர ஒற்றுமை உணர்வைத் தொடர வேண்டும். அதுவே நமது உண்மையான பலம்.
இந்திய சமூகத்திற்கான வணிக நிதியுதவி உட்பட இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். அதேபோல் கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும்.
இது நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரின் எதிர்காலத் தேவைக்கு மிகவும் முக்கியமானதாகவும் அமையும்.