மதுகை - களனிப் பல்கலைக்கழகம்

மதுகை - களனிப் பல்கலைக்கழகம் தமிழ் மாணவர் ஒன்றியம் - களனி பல்கலைக்கழகம் களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் புதிய படைப்பு...

முல்லை மண்ணில் - கல்விக்காய் கனவுகளை விதைத்திருந்த சிறு உள்ளங்களுக்கு, கரம் கொடுத்து எழுந்திடச் செய்திட உளம் கொண்டு விரை...
10/01/2026

முல்லை மண்ணில் - கல்விக்காய் கனவுகளை விதைத்திருந்த
சிறு உள்ளங்களுக்கு,
கரம் கொடுத்து எழுந்திடச் செய்திட
உளம் கொண்டு விரைந்தோம் நாம்...
தமிழ் மாணவர் ஒன்றியமாய்...

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் "மதுகை - 2025" ற்கு பின்னரான சமூக செயற்றிட்டங்களில் இரண்டாவதும் இறுதியுமான செயற்றிட்டமாய், முல்லைத்தீவு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தருணமிது . . .

✍️வரிகள் : கலையரசி கிருபாரூபன்

கைகளில் புத்தகப்பையும் கண்களில் ஆயிரம் கனவுகளுமாய் காத்திருக்கும் சிறார்களுக்காய்,களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய...
07/01/2026

கைகளில் புத்தகப்பையும் கண்களில் ஆயிரம் கனவுகளுமாய் காத்திருக்கும் சிறார்களுக்காய்,
களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய அன்பின் கரங்கள் - கவரவில தமிழ் மகா வித்தியாலய மாணவர்களைத் தழுவிக்கொண்ட தருணம்.

சிகரம் தொடப் போகும் சிறார்களின் கல்விப்பயணத்திற்கு வழியமைத்திடும் கற்றல் உபகரணங்கள் எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட தருணங்களின் பதிவுகள் . . .

✍🏻 வரிகள் : சந்திரகாந் சாருஜன்

தரணியில் உதித்த ஒளிமய ஞாயிறாய்,காவியக் காதலில் கரைந்தவளாய்,நெஞ்சில் நிழலென நிலைத்தவளாய்,  விழாக்களின் ஒளியாய் ஒளிர்ந்தவள...
06/01/2026

தரணியில் உதித்த ஒளிமய ஞாயிறாய்,
காவியக் காதலில் கரைந்தவளாய்,
நெஞ்சில் நிழலென நிலைத்தவளாய்,
விழாக்களின் ஒளியாய் ஒளிர்ந்தவளாய்,
கலைக்கும் கவிக்கும் - கருவாய்
மதுகையவள் வரவால்,

நம் உள்ளம் நிறைந்த இனிய நினைவுகள் மூன்றாம் பாகமாய் . . .

வரிகள் : சங்கீர்த்தனா நேசன்

வாழ்வாங்கு வாழும் தமிழருக்கு,  தமிழ்த் திருநாள் இனிதென வந்தது போல், முப்பாட்டன் மயில்கள் தோகை விரித்து,  அரங்கமெங்கும் ஆ...
03/01/2026

வாழ்வாங்கு வாழும் தமிழருக்கு,
தமிழ்த் திருநாள் இனிதென வந்தது போல்,
முப்பாட்டன் மயில்கள் தோகை விரித்து,
அரங்கமெங்கும் ஆடிய பெருவிழா!
அழகு விருந்தென களனியர்க்காய்,
"மதுகை" வந்தாள் காதல் காரிகையாய்.

அவளின் இனிய நினைவுகள் இங்கு இரண்டாம் பாகமாய் . . .

வரிகள் : சங்கீர்த்தனா நேசன்

தமிழரின் நெஞ்சில் திருநாள் எழுந்தது,  முரசொலி முழங்க, விழா வானம் பரந்தது.  அழகுக் காரிகை - மதுகை வந்தாள்,  கண்ணின் கனவாய...
02/01/2026

தமிழரின் நெஞ்சில் திருநாள் எழுந்தது,
முரசொலி முழங்க, விழா வானம் பரந்தது.
அழகுக் காரிகை - மதுகை வந்தாள்,
கண்ணின் கனவாய், நெஞ்சில் குடியிருந்தாள்.
அவள் வரவு காதல் காவியமாய்,
விழாக்களில் ஒளியாக நிலைத்தாள்.
முடிவற்ற நிழலாய் அவள், நம் உள்ளத்தில் திகழும் நினைவாய் . . .
பாகம் - 01

வரிகள் : சங்கீர்த்தனா நேசன்

01/01/2026

களனியர் நெஞ்சில் உதித்த கனவு,
காலத்தைக் கடந்து வளர்ந்த நினைவு,
மூத்தவர் சுவட்டில் இளையவர் தடம் பதித்து,
முயற்சித் தீயால் தரம் உயர்த்தி,
மௌனங்கள் கலைந்து மகுடம் சூடி,
சாரல் துளி ஆறாய் மதுகை மேடையில்...

வரிகள் : மேகானந்தசிவம் விதுர்சன்
வடிவமைப்பு : குமார் கௌதம்

01/01/2026

தூங்காது நித்திரை விழித்த விழிகள்....
சளையாது நித்தம் பயின்ற பயிற்சிகள்....
அயராது பகலிரவாய் ஆக்கிய அலங்காரங்கள்...

அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் வாகை சூட ...
களனியரின் தீராத் தமிழ்த் தாகம் தீர....
எம்மவர்கள் ஈன்றெடுத்த 'மதுகை 2025' இனிதே நிறைவுற...

கடந்த மதுகை 2024 தருணங்களில் இருந்து ஒரு சிறு மீள் பார்வைத்தொகுப்பு...

28/12/2025

காத்திருந்த கணப்பொழுது கைகூடும் நாளாம்
களனியர் தம் கலைகள் - அவை
களம்காணும் நாளாம்
தமிழ் நெஞ்சங்கள் ஒன்றாகக் கூடி தமிழ்க்காதலென தொனிப்பொருள் கொண்டு தமிழ்ப் பெருமை பாடும் மாபெரும் மதுகை இன்றே...

வரிகள் : சந்திரகாந் சாருஜன்
காணொளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு : திரவியறட்ணம் அபிராம் ,
ஐங்கரன் விதுரன்

27/12/2025

மற்றோர் மொழி பரந்த மண் ஒன்றிலே,
ஒன்றாய் இணைந்த எம்மொழி மாந்தர்,
தமிழெனும் தாயவள் பெருமை தனை,
எண்திசையெங்கிலும் முழங்கிடும் வண்ணம்,
செம்மொழிக்கென ஓர் விழாக் காண,
நெடுநாட்கள் தவமிருந்தோம்...
இந்த ஓர் இரவும் எம்மைக் கடந்து விட்டால்,
நாளை நம் தாயவள் மேடை ஒன்றில்,
"மதுகை" என மகுடம் சூடக் காண்போமே . . .

வரிகள் : கலையரசி கிருபாரூபன்
வடிவமைப்பு : குமார் கௌதம்

Address

Kandy Road
Dalugama

Telephone

+94 76 845 8941

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுகை - களனிப் பல்கலைக்கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மதுகை - களனிப் பல்கலைக்கழகம்:

Share