வாகையூர் சேர்மன் மஹால்

  • Home
  • வாகையூர் சேர்மன் மஹால்

வாகையூர் சேர்மன் மஹால் Petrol Pump & Marriage Hall & Guest House

பெட்ரோல் ₹.200 க்கு மேல் மற்றும் டீசல் ₹.500க்கு மேல் நிரப்புவோருக்கு..
20/08/2026

பெட்ரோல் ₹.200 க்கு மேல் மற்றும் டீசல் ₹.500க்கு மேல் நிரப்புவோருக்கு..

வீழ்ந்திடும் நதியென்று வீழாமல் இருக்கநகராமல் எந்தநதியும் நிற்பதில்லை...வாடிடும் மலரென்றுமலர்கின்ற பொழுதேமணம் வீசாமல் எந்...
20/08/2026

வீழ்ந்திடும் நதியென்று
வீழாமல் இருக்க
நகராமல் எந்த
நதியும் நிற்பதில்லை...

வாடிடும் மலரென்று
மலர்கின்ற பொழுதே
மணம் வீசாமல் எந்த
மலரும் மலர்வதில்லை..

நாளை எதுவும் நடக்கட்டும்
இன்று நமதாய் சிறக்கட்டும்..

நேற்றின் கவலை முடியட்டும்..
சேற்றில் நாற்று முளைக்கட்டும்..

18/08/2026
காக்கைகளின் கூட்டம் கருங்குயிலை ஏற்பதில்லை..நரிகளின் கூட்டத்தில்ஓநாய்கள் வாழ்வதில்லை..முதிர்ந்த சிங்கத்தைஇளஞ்சிங்கங்கள் ...
18/08/2026

காக்கைகளின் கூட்டம்
கருங்குயிலை ஏற்பதில்லை..
நரிகளின் கூட்டத்தில்
ஓநாய்கள் வாழ்வதில்லை..

முதிர்ந்த சிங்கத்தை
இளஞ்சிங்கங்கள் உடன்
சேர்ப்பதில்லை...
முடியாத குரங்கிற்கு
முடியும் குரங்குகள் உணவு
ஊட்டுவதில்லை..

எதிரியே ஆனாலும்
இல்லம் வந்தார்க்கு
இன்முகம் காட்டுவது
இனிய பண்பாடு..

உறவுகளே ஆனாலும்
உள்ளம் இல்லார் இடம் தேடி
மானம் கெடப் போவது
மதியற்றோர் நிலைப்பாடு..

புறக்கணிப்புகள் புரிந்து
புறப்பட வேண்டும்..
புற கணிப்புகள் அறிந்து
புறக்கணிக்க வேண்டும்..

தள்ளென சொல்லும் போது தள்ளாதவன்...செல்லென சொல்லும் போது செல்லாதவன்...கல்லென சொல்லும் போதுகல்லாதவன்..நில்லென சொல்லும் போது...
01/08/2026

தள்ளென சொல்லும் போது
தள்ளாதவன்...
செல்லென சொல்லும் போது
செல்லாதவன்...

கல்லென சொல்லும் போது
கல்லாதவன்..
நில்லென சொல்லும் போது
நில்லாதவன்..

வில்லென சொல்லும் போது
விலகாதவன்..
முள்ளென சொல்லும் போது
விலக்காதவன்..

நல்லெண்ண சொல் கூறும்
நல்லார் சொல் கேளாதவன் ..
உள்ளெண்ண ஒளி கூறும்
வல்லார் வழி செல்லாதவன்

சொல்லொண்ணா துயரூறும்
கள் நாடி களவு கொலை யாடி
பொல்லானாகி பூமி போதல்
எல்லாமும் இயல்பாம்..

தந்தை தாய் மதியான் என்றும்
சிந்தை சீரழிந்து கெடுவான்..
நிந்தைத் துன்பம் பொறுப்பான் என்றும்
விந்தை உலகில் சிறப்பான்..!

28/07/2026

♦ கடந்த 10 வருடங்களில் சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது!

♦ *முன்பெல்லாம் 2,00,000 ரூபாய் முதலீடு செய்தால் கூட ஓரளவு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி முன்னேற முடியும்!*

♦ பல ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறிய தொழில் அதிபர்கள் உருவான காலகட்டம் அது!

♦ *ஒன்று பெரிய அளவில் முதலீடு போட்டு குறைந்த விலையில் விற்க வேண்டும்!*

♦ *அதைவிட கொடுமை உழைப்பில் பெரும்பகுதியை வட்டி /வாடகை தின்று விடுகிறது!*

♦ கடன் கொடுத்தாலும் திரும்ப வரும் என்று உத்தரவாதம் இல்லை!

♦ *லட்ச ரூபாய் முதலீட்டில் செய்து லாபம் பார்த்த தொழிலுக்கு இன்று பத்து லட்சமாவது முதலீடு செய்தால் தான் நஷ்டமின்றி பிழைப்பு ஓடும் என்ற நிலை வந்து விட்டது!*

♦ அதைவிட கொடுமை புதிய முயற்சிகளில் யாரும் இறங்குவதே இல்லை!

♦ *ஒரு ஊரில் ஒருவர் ஒரு தொழிலை ஆரம்பித்தால் அந்த முதலீட்டிற்கு நுகர்வு அதாவது விற்பனை கணிசமான அளவு வருகிறது என்று தெரிந்து விட்டால் போதும் வசவசவென அதே பகுதியில் அதே தொழிலை பலரும் ஆரம்பித்து போட்டி போட்டு லாபக்குறைவில் விற்று குறிப்பிட்ட காலத்தில் கூண்டோடு காணாமல் போய்விடுகின்றனர்! முதன்முதலில் அந்த தொழிலை செய்தவரும் சேர்த்து காணாமல் போகிறார்!*

♦ அதைவிட பிரமாதம் உழைக்கும் தொழிலாளர்களின் மனப்போக்கு!

♦ *10 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் இருந்த உழைக்கும் தன்மை இப்போது இல்லை! அவர்கள் தொழிலைக் கற்றுக் கொண்டு எப்படியும் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பார்கள்!*

♦ இப்போது அப்படி இல்லை, இந்த கூலிக்கு இவ்வளவு உழைத்தால் போதும் என்று முதலாளிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் செய்கின்றனர்!

♦ வேலை செய்வதிலும் ஈடுபாடு இல்லாமல், ரிஸ்க் எடுத்து முதலீடு போட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணமும் இல்லாமல் குழப்பங்கள் நிறைந்த இளைஞர்கள் கூட்டம் பெருகியுள்ளது!

♦ கடந்த 10 வருடங்களில் பிரம்மாண்டமான பல ஹோட்டல்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று நேர்மையற்ற பணத்தில் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்கள் திகைக்க வைக்கின்றன!

♦ *மிகப்பெரிய தொழில் முதலீடு, திறமை, ஒழுக்கம் இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தொழிலதிபர் உருவாவது இனி சாத்தியம் இல்லை!*

♦ நேர்மையற்ற பணம் விதவிதமான வழிகளில் வேரூன்றி வியாபார சந்தைகளை வளைத்து விட்டது!

♦ *அரசியல், அதிகார தொடர்பு, பணம் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து ஒரு புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர் ஆக இனி வாய்ப்பில்லை என்ற அவநம்பிக்கை தான் மிஞ்சுகிறது!*

♦ இனி வரும் காலங்களில் பலமுள்ளது வாழும், பலமற்றது வீழும், அது எந்த தொழில் ஆனாலும் சரி!!!

♦ *எல்லாம் சில காலமே நிற்கும் , காலம் மாறுதலுக்குரியது என்பதை சமுக , பொருளாதாரம், பொதுவாழ்க்கை மற்றும் வாழ்வியலில் நடக்கும் நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் , இன்றைய , நாளைய சமுதாயம் உணரக்கூடியதாக அமையும்.*

♦ ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக
மேலே உள்ள எழுத்துகள்
பேசும் !!!

♦ சற்றே சிந்திப்போம்...
🙏🙏🙏🙏🙏

ஆழிப் பெரிதெனினும் அதன் நீர் அருந்த முடியாது..ஆல் பெரிதெனினும்அதனில் நெல் விளையாது..பனை உயரமெனினும்திணை போல் பயன்படாது.....
24/07/2026

ஆழிப் பெரிதெனினும்
அதன் நீர் அருந்த முடியாது..
ஆல் பெரிதெனினும்
அதனில் நெல் விளையாது..

பனை உயரமெனினும்
திணை போல் பயன்படாது..
சினை சிறிதெனினும்
உயிர் பிறப்பில் நிலை மாறாது..

தோற்றம் அபாரமாய்
தோன்றினாலும் பயன்படும்
ஆற்றல் அளவிலே தான் அதன்
ஏற்றம் எண்ணி மதிக்கப்படும்..

தோற்றம் அற்பமாய்
தோன்றினாலும் இணை
மாற்று இல்லா மகத்துவம்
பெரிதெனப் போற்றப்படும்..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
ஒரு தனித்துவம் உண்டு - பிறரை
ஒப்பிட்டுப் பார்த்து தன்னை
தாழ்த்திக் கொள்ளாமல் இருப்பது நன்று...

அரவத்திற்கு  விடம் அரண் அகிலத்திற்கு அது மரண் ..அதிகாரத்திற்கு அடிபணிதல் சரண்..அரசியலுக்கு அடிபணிதல் முரண்...வாங்கும் வர...
22/07/2026

அரவத்திற்கு விடம் அரண்
அகிலத்திற்கு அது மரண் ..
அதிகாரத்திற்கு அடிபணிதல் சரண்..
அரசியலுக்கு அடிபணிதல் முரண்...

வாங்கும் வரனுக்கு இன்பம்..
வழங்கும் வனிதைக்கு துன்பம்..
கோபுரத்தின் ஆரம் கும்பம்
கூத்தாடிக்கு பாரம் கும்பம்...

ஆக்கம் ஒன்றாயினும் -தரும்
தாக்கம் வேறு வேறானவை...
ஊக்கம் ஒன்றாயினும் தரும்
உயர்வு வேறு வேறானவை...

21/07/26 முதல், பெட்ரோல் ₹.200 க்கு மேல் மற்றும் டீசல் ₹.500க்கு மேல் போடுபவர்களுக்கு, லிட்டருக்கு 1 ரூபாய் தள்ளுபடி வழங...
21/07/2026

21/07/26 முதல், பெட்ரோல் ₹.200 க்கு மேல் மற்றும் டீசல் ₹.500க்கு மேல் போடுபவர்களுக்கு, லிட்டருக்கு 1 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Address

Vagaiyur

606106

Telephone

+918111063666

Website

Alerts

Be the first to know and let us send you an email when வாகையூர் சேர்மன் மஹால் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Event Planning Service?

Share