30/05/2026
70களின் 80களில் தலைமுறைகள் படுத்திய அரசியலை 90களின் தலைமுறை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்த தவறியதன் விளைவு,
#தனியார்மயம் #தாராளமயம் #உலகமயமாதல் ஆகியவற்றால் ஒரு சமூகம் தன் சுவடுகளை மறந்தே வாழத் தொடங்கியது...
அதற்கு அடுத்து வந்த தலைமுறை புதிதாக உருவான ஒரு உலகில் அப்படியே பிறந்த குழந்தைகளாக
#கண்டதே_காட்சி
#கொண்டதே_கோலம்
#கிடைத்ததே_வாழ்க்கை என்று வாழ தொடங்கியதன் விளைவு,
#அரசியல் என்றாலே அது #சாக்கடை
அரசியல் எல்லாம் யாரோ #கதர்_சட்டை போட்டுக் கொண்டு எங்கேயோ
யாரோ எதற்கோ
யாருக்கோ போராடுகிறார்கள்
என்ற நினைப்பில் எப்பொழுதும் ஃபோனுக்குள்ளேயே விளையாட்டுகளிலேயே
தொலைத்துக் கொண்டிருந்தது
#ஜென்சி_தலை முறைகளின் வாழ்க்கை....
தன் குடும்பம் படும் கஷ்டம் என்ன?? வேலை வாய்ப்பு என்பது இங்கு எவ்வாறு அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது??
இட ஒதுக்கீடு என்பது என்ன??
ஒரே ஒரு நேரம் அரிசி உணவிற்காக கடந்த கால சமூகம் எவ்வாறு எல்லாம் ஏங்கி தவித்து காத்துக் கொண்டிருந்தது??
என்பதை எல்லாம் விளக்க இங்கு யாரும் இல்லை...
வேண்டுமானால் #குடும்பங்கள் ஒன்று சேரும்போது #கட்சிக்காரர்கள் 70-களின் 80-களின் #தலைமுறைகள் ஒன்று சேரும்பொழுது
அந்த கால போராட்டங்களை வாழ்க்கையை பொழுதுபோக்குக்காக நினைவு கூறக் கூடியதாக அமைந்துவிட்டது..
குறிப்பாக 2010
2015க்கு பிறகு காலகட்டம் என்பது.....
தன் வீட்டில் வளரும் பேரக்குழந்தைக்கும் அதே வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டி குடும்ப உறவினர்கள் தாய், தந்தை என அனைவருமே முழுவதுமாக அரசியலை வெறும் காட்சி பொருளாக மட்டுமே பார்த்துக் கொண்டு
தற்பொழுது அது சினிமா மோகதால் கட்டி எழுப்பப்படும் பொழுது தமிழ்நாட்டின் அரசியல் எதை கடந்து வந்திருக்கிறது??
எதைக் கொண்டு வந்து நமக்கு கொடுத்திருக்கிறது??
என்பதை எல்லாம் ஒட்டுமொத்தமாக திரை கவர்ச்சியில் #சினிமா மாயையில் விழுந்து போய்
இனி தான் அது விழித்துக் கொள்ளுமா??
என்கிற கேள்வி எழும்பொழுது
வளரும் தலைமுறை இடம் அரசியலை உரையாட வேண்டியதன் தேவையின் ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் DMK - Dravida Munnetra Kazhagam
அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற ஜென்சி தலை முறைகளுக்கான கலந்துரையாடல்....
விழுவதும் தடுமாறுவதும் அவமானம் அல்ல..
வீழ்ந்தே கிடப்பதும் தடுமாற்றத்திலேயே உழல்வதும் தான் பெருத்த அவமானம்...
S.Abu Thaheer
,
💐💐💪💪🔥🔥🤝🤝😍😍🙏🙏