21/12/2023
🤔 *ஒருவரை ஒருவர் ஏன் குறை பேசுகிறோம்...❓*
1) தன்னை விட ஒரு செயலை வேறு ஒருவர் திறமையாகச் செய்த போது......
2) ஒரு மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிற போது......
3) நம்மிடம் பொறாமைத்தனம் மிகுதியாகின்ற போதும்...,.... நாம் மற்றவர்களின் மேல் பொறாமை கொண்டு அவதூறு பேசுகிறோம்....
*மற்றவர்களின் குறையைக் காண்பது மிக எளிது.ஆனால் அந்தக் குறைகள் நம்மிடம் இல்லாமல் பார்த்துக் கொள்வது தான் கடினம்.*.... ☺️
பிறருடைய குற்றங்களை அதிகமாகச் சிந்திப்பதை விட தங்களின் குற்றங்களை அதிகமாகச் சிந்தியுங்கள் என்பது பழமொழி.....
நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள் என்பது பைபிளின் கூற்று ..
" பெரியவர் ஒருவர் கையில் எப்போதும் ஒரு முகக்கண்ணாடி இருக்கும். அதை எடுத்து அடிக்கடி அதைப் பார்ப்பார்..பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார்...
இதை வெகு நாட்களாக அருகில் வசித்து வந்த ஒரு இளைஞன் கவனித்துக் கொண்டு வந்தான்...
ஒரு நாள்,அந்தப் பெரியவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்...
பின்பு அவரிடம் அய்யா,,''நீங்கள் அடிக்கடி அந்தக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே, அது ஏதாவது அதிசயமான கண்ணாடியா?" என்று வினவினான்....
அதற்கு அந்தப் பெரியவர்,, ''சாதாரணக் கண்ணாடி தான். ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..
"பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?” என்றான்.
"ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக் காட்ட வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கண்ணாடியிடம் கற்க வேண்டும் !”..
"எப்படி?”என்றான்..
1️⃣ *"நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது.....*
*அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.உள்ளதை உள்ளபடி காட்டுகிறது...*
அதேபோல், மற்றவர்களிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும்....
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.....
2️⃣ *கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும்....*
அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது....
3️⃣.*ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுவது இல்லை" என்றார்...*
நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்கும் என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்...
என்பது தானே அந்த கண்ணாடி கற்றுத் தரும் பாடம் என்றார் அந்த பெரியவர்.
-> _அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்._
_என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;_
_அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்._
_சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்._
( யாக்கோபு 1 : 22 - 25 )
🔥எழும்பி பிரகாசி 🔥