ஆலகிராமம்

Directions

ஆலகிராமம் ஆலகிராமம் பழமையான திருக்கோயில்கள் அமைந்துள்ள கிராமம்...

*ஆலகிராமம் வரலாறு பதிவு-1*--------------------------------------------------------தலைப்பு: 📜 130 ஆண்டுகளுக்கு முந்தைய நம...
07/03/2026

*ஆலகிராமம் வரலாறு பதிவு-1*
--------------------------------------------------------
தலைப்பு: 📜 130 ஆண்டுகளுக்கு முந்தைய நமது ஆலகிராமம்: ஒரு வரலாற்றுப் பயணம்! 🌾
நமது ஆலகிராமத்தின் (திண்டிவனம் தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம்) 1890-ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களைப் புரட்டியபோது கிடைத்த சில சுவாரசியமான தகவல்கள் இதோ! நம் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தின் பெருமையை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
📍 கிராமத்தின் அமைப்பு: அன்று ஆலகிராமம் சுமார் 1797 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டிருந்தது நிர்வாக வசதிக்காக கிராமம் 13 கண்டங்களாகவும் (Khandams), 1036 நில அளவை எண்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது நிலத்தின் எல்லைகளைக் குறிக்க 3650 கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டன
🛕 கோவில் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியம்: ஆவணங்களில் பல முக்கிய வழிபாட்டுத் தலங்கள் "பகோடா" (Pagoda) என்ற பெயரில் நிலங்களுடன் பதிவாகியுள்ளன:
ஈஸ்வரன் கோவில் & தர்மதோப்பு: நிலம் ஈஸ்வரன் கோவிலும் 1 ஏக்கர் 2 செண்ட், அதன் அருகிலேயே 1 ஏக்கர் 7 செண்ட் பரப்பளவில் குளக்கரை தர்மதோப்பும் அமைந்திருந்தது
விஸ்வேஸ்வரசுவாமி கோவில்: இதற்கான பூஜை காரியங்களுக்காக சுமார் 2 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டிருந்தது
அய்யனார் மற்றும் பிள்ளையார்கோவில்: இக்கோவில்களுக்கும் தனித்தனியாகத் தர்ம நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன
கிராமத்தில் மொத்தம் 3 ஏக்கர் 61 சென்ட் நிலம் சமயச் சார்புடைய மானிய நிலங்களாக (Religious Inams) இருந்தன
🚜 விவசாயம் மற்றும் பாசனம்: அன்றைய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் விளங்கியது.
முக்கிய பயிர்கள்: நெல், ராகி, கம்பு, மணிலா (நிலக்கடலை), எள் மற்றும் அவுரி (Indigo) போன்றவை விளைவிக்கப்பட்டன
பாசனம்: அவையக்குப்பம் ஏரி மற்றும் தொண்டி ஆற்றின் வாய்க்கால்கள் மூலம் நிலங்கள் செழிப்படைந்தன
👥 மக்கள்தொகை (1881 கணக்கெடுப்பு): அன்றைய காலத்திலேயே கிராமத்தில் 407 வீடுகள் இருந்தன. மொத்த மக்கள்தொகை 2737 ஆக இருந்தது. கிராமத்தில் 10 கடைவீதிகளும் (Bazars), 200 கிணறுகளும் பயன்பாட்டில் இருந்தன
நம் ஊரின் வேர்களையும், பழமையையும் போற்றுவோம்! இந்தப் பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 🤝
#ஆலகிராமம் #வரலாறு #ஆன்மீகம்

🚨 கவன ஈர்ப்பு போராட்டம்: கூட்டேரிப்பட்டு - தென்புத்தூர் சாலை குறித்து முக்கிய அறிவிப்பு! 🚨தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங...
15/11/2025

🚨 கவன ஈர்ப்பு போராட்டம்: கூட்டேரிப்பட்டு - தென்புத்தூர் சாலை குறித்து முக்கிய அறிவிப்பு! 🚨
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக இன்று (நவம்பர் 15, 2025) கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

📢 கோரிக்கைகளின் சாராம்சம்:
அவசரத் தேவை - சாலை விரிவாக்கம்: கூட்டேரிப்பட்டு முதல் தென்புத்தூர் வரையிலான 6 கிலோ மீட்டர் சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மண்ணரிப்பு தடுப்பு பணி: ஏரியிலிருந்து வெளியேறும் நீர், நான்கு கண் பாலத்தில் இருந்து சாலை ஓரமாகப் பாயும் ஓடும் நீர் பகுதியில் சிமெண்ட் சுவர் அமைத்து மண்ணரிப்பைத் தடுக்க வேண்டும்.

🤝 பங்கேற்றவர்கள்:
ஆலகிராமம், மண்டகப்பட்டு, பேராம்பட்டு, தென்புத்தூர், நெடி,மொழியனூர், சோழியசொர்குலம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டு, இந்தப் பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தப் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காலம் தாழ்த்தி கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை இப்பகுதி கிராம மக்கள் அறிவிப்போம் என்று கூறி இந்தப் போராட்டத்தை நிறைவு செய்தோம்.

#கவனஈர்ப்புபோராட்டம் #சாலைவசதி #விவசாயிகள்_பாதுகாப்பு
#அனைத்துகட்சிகள் #மக்கள்_கோரிக்கை
#கூட்டேரிப்பட்டு
#சோழியசொர்குலம்
#ஆலகிராமம்
#மண்டகப்பட்டு
#பேராம்பட்டு
#தென்புத்தூர்
#மோழியனூர்
#நெடி

📢 *தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் - ஆலகிராமம் கிளை வெளியீடு* 📢 *தலைப்பு: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூட்ட...
11/11/2025

📢 *தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் - ஆலகிராமம் கிளை வெளியீடு* 📢

*தலைப்பு: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு முதல் தென்புத்தூர் வரையிலான சாலை விரிவாக்கம் கோரிக்கை!*

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள கூட்டேரிப்பட்டு முதல் தென்புத்தூர் வரையிலான சாலை *பல ஆண்டுகளாக மிகவும் குறுகலாகவும், ஆபத்தானதாகவும்* இருந்து வருகிறது. *இந்த வழித்தடத்தில் எண் 8 மற்றும் 24 கொண்ட அரசு பயணிகள் பேருந்துகள் தினசரி* சென்று வருகின்றன. *இச்சாலை குறுகலாக* இருப்பதால், *பலமுறை அரசுப் பேருந்துகள் கவிழ்ந்து, பல நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்* .

குறிப்பாக, *ஆலகிராமம் முதல் தென்புத்தூர் வரையிலான வழித்தடம் சாலையின் மிக மோசமான* பகுதியாக உள்ளது. இங்கு *ஒரு நான்கு சக்கர வாகனம் வந்தால், மற்றொரு இருசக்கர வாகனம் ஒதுங்கிச் செல்லக்கூட இடமில்லாத* அளவுக்கு சற்று குறுகலாகவே இருக்கிறது.

கடந்த *கடந்த பல ஆண்டுகளில்* இந்தச் சாலையில் ஏற்பட்ட விபத்துகளில், *தென்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்களும்,* *பேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும், மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் உயிரிழந்துள்ளனர்.* *மேலும், பல நபர்கள் விபத்துக்குள்ளாகி கை, கால் ஊனமுற்றுள்ளனர்.*

இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், பல ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

*மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. சிவகுமார்* அவர்களுக்கு இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக மனு அளித்ததன் அடிப்படையில், அவர் சட்டமன்றத்திலும் இதுகுறித்து விவாதித்துள்ளார். அப்போது *சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்* , இந்த பணியை உடனடியாக செய்து தருவதாக சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

ஆனால், தற்போது கூட்டேரிப்பட்டில் இருந்து *வெறும் இரண்டு கிலோமீட்டர்* தொலைவுக்கு மட்டுமே சாலை அகலப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் சாலை ஏற்கனவே சற்று அகலமாகவே இருக்கும்.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் *விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்களில் சார் ஆட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும்* கோரிக்கை வைத்திருந்தது.

எனவே, ஆலகிராமம் முதல் தென்புத்தூர் வரையிலான மிகக் குறுகலான வழித்தடத்தையும் சேர்த்து, *மொத்தம் 6 கிலோமீட்டருக்கு சாலை விரிவாக்கம்* செய்ய வேண்டும் என்று *தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஆலகிராமம் கிளை,* இப்பகுதி மக்கள் சார்பாக சிரம் தாழ்த்தி கோரிக்கை வைக்கிறது.

இப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

* #சாலைபாதுகாப்பு #விழுப்புரம் #திண்டிவனம் #தமிழகவிவசாயிகள்பாதுகாப்புசங்கம் #ஆலகிராமம் #சாலைவிரிவாக்கம்*

கூட்டேரிப்பட்டு ஆலகிராமம் வழியாக தென்புத்தூர் சாலை 6 கிலோமீட்டர் முழுவதையும் விரிவாக்கம் செய்ய 29-10-2025 சார் ஆட்சியரிட...
30/10/2025

கூட்டேரிப்பட்டு ஆலகிராமம் வழியாக தென்புத்தூர் சாலை 6 கிலோமீட்டர் முழுவதையும் விரிவாக்கம் செய்ய 29-10-2025 சார் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது

சாலை குறுகலாக இருக்கும் காரணத்தால் மேற்கண்ட வழி தடத்தில் கடந்த காலங்களில் சாலை விபத்தில் இறந்தவர்களின் பட்டியல்

தென் புத்தூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி, மண்ணாங்கட்டி, கோமதி

பேராம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்

மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால்

இன்னும் பல விபத்துகளில் பல நபர்களுக்கு கை கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆகவே கூட்டேரிப்பட்டு To தென்புத்தூர் வரை சாலையை 6 கிலோமீட்டர் அகலப்படுத்த அதனை சார்ந்த கிராமத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது நடக்காத பட்சத்தில் அனைத்து கிராமங்களும் ஒன்று சேர்த்து அடையாளம் உண்ணாவிரதம் அல்லது கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழித்தடத்தில் வேறு ஏதாவது சாலை விபத்தில் இறந்திருந்தால் அவர்கள் பெயர்களை குறிப்பிடலாம்...

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வயலில் தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

25/09/2025

ஆலகிராமம் பெருமக்களே நாளை 26-09-2025 உங்களுடன் முதல்வர் அவ்வையார் குப்பத்தில் .....

மயிலம் தொகுதியில் 4வது பெரிய ஊர் ஆலகிராமம் ஓட்டு போடுவதில்.....

நம் ஊரில் எந்த வசதியும் இல்லை இப்போது இந்த வசதியும் இல்லை....😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

கூட்டேரிப்பட்டு To தென்புத்தூர் சாலையாக அகலப்படுத்தும் பணியில் 2 கிலோமீட்டர் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்று கூறியுள்...
19/09/2025

கூட்டேரிப்பட்டு To தென்புத்தூர் சாலையாக அகலப்படுத்தும் பணியில் 2 கிலோமீட்டர் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.

இதனை 6 கிலோமீட்டர் முழுவதையும் போட சோழியசொற்குளம், ஆலகிராமம், பேராம்பட்டு மண்டகப்பட்டு, தென்புத்தூர் கிராமத்து விவசாயி சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் மூலம் குரல் கொடுத்தால் மட்டுமே நடைபெறும்.,

குறிப்பு: 25-09-2022 அன்று
விழுப்புரம்: மயிலம் அருகே வயலில் தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து - 30 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வயலில் தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

18/04/2025

ஆலகிராமம் சிவன் கோயில் கும்பாபிஷேகம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.....

ஆலகிராமம் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பின் அளவுகள் கிபி 1871 1871 மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக  ஆங்கிலேயர் வெளி...
25/11/2024

ஆலகிராமம் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பின் அளவுகள் கிபி 1871

1871 மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக ஆங்கிலேயர் வெளியிட்ட புத்தகம்

வரிசையில் 226-யை பார்க்க

08/10/2024

Address

Alagramam
Tindivanam
604302

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆலகிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share