24/03/2017
சுவையான செய்தி......
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல ,
நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
.. என்ன பதில் சொல்வது இதற்கு..?
எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.
நண்பர் இதற்கு ஒரு சுவையான சம்பவத்தை சொன்னார் :
புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்....
வள்ளி தெய்வானையுடன் திருமணம் முடிந்த பிறகு விருந்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது....
முருகன் அமர்ந்தார் உண்ண...
வள்ளிக்கும் தெய்வானைக்கும் சண்டை வந்ததாம்,,,,, யார் பரிமாறுவதென்று....
இதை பார்த்த முருகன், தன் வேலால் இலையில் ஒரு கோடிட்டு பிரித்து,,,,,,
மேல் பாதியை வள்ளிக்கும் மறுபாதியை தெய்வானைக்கும் உரிமை கொடுத்து பரிமாரச்சொன்னாராம்....
அதனால் தான் இன்றும்,,,,,,
இலையின் மேல் பாதியில் கிழங்கு, காய், கனிகளை வைக்கின்றோம்.....
கீழ் பாதியில் சோறு, பாயசம் முதலியவற்றை வைக்கின்றோம்....
என்று கூறினார்.....
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கூறிய செய்தி என்னவோ இனிப்பாகத் தான் இருந்தது.....
ஆனால்,,,,,
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சோறு , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
ஆனால் ....
🍜🍲🍣🍧🍿🍵🍾🍹🍷🍸🍗🍠🍞🍤🍖🍗🌮🍔🍟🌯
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி ,
அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?
😱😱😱😱😱😱😱😱😱😱