முகவைக்கு உயிரூட்டுவோம்

முகவைக்கு உயிரூட்டுவோம் Like this page to make ramanathapuram green valley..

இராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள சீமகருவேல மரங்களை அகற்றி நாம் மண் வளத்தை காக்க ஒரு குழு அமைத்து முயற்சி செய்தால் எப்படி இருக்கும் என்பதே..யார் தலைமையும் இல்லை.. பத்து பேர் சேர்ந்த குழு அமைத்தால் கூட போதும்,இதற்க்கு முன் ஊரணிக்காக ஓரணியில் ஒரு மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது..முதலில் FB ஓர் குழுவை உருவாக்குவோம்,விருப்பமுள்ளவர்கள் இணையட்டும்..பின்பு திட்டமிடுவோம்..
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

28/10/2025

இந்திய நாட்டின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வள்ளபாய் பட்டேலின் 150ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இ....

16/07/2019

உங்க ஊர் உங்க கடமை வாங்க திருவாடனை புத்துயிர் பெற ஒன்று படுவோம்...
#நமதுஊர்நமதுகடமைநம்மராமநாதபுரம்

08/07/2019

முகவையில் முதலில் திருவாடனை ஊரில் நாம் பணியை துவங்கலாமா...
#நமதுஊர்நமதுகடமைநம்மராமநாதபுரம்

21/10/2017
06/09/2017
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உங்கள் கண்ணுக்கு புலப்படும் அழிவை நோக்கிய ஒரு நீர்நிலையை எங்களிடம் கூறவும்... உங்களை இணைத...
02/03/2017

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உங்கள் கண்ணுக்கு புலப்படும் அழிவை நோக்கிய ஒரு நீர்நிலையை எங்களிடம் கூறவும்... உங்களை இணைத்து நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்....உங்கள் ஊர், தாலுகா ஆகிய தகவலுடன் உங்கள் நீர்நிலை பெயர் குறிப்பிட்டு கூறவும் அல்லது watsapp செய்தியாக அனுப்பவும்....9986772896

29/10/2015

தமிழக நீராதாரத்தை மீட்டெடுக்க வாரீர் .....இந்த link யில் click செய்து ....sign the petition button ஐ click செய்தால் ....உங்கள் விவரம் fill செய்து click seithaal.....signed successfully வரும்....அப்போதுதான் முழுமைப்பெரும் ....நமது நீர் தேக்கங்களை மீட்டெடுக்க சிறு நேரம் ஒதுக்கவும் .....once finished...pls share to many
https://www.change.org/p/tamilnadu-govt-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?recruiter=398876004&utm_source=share_petition&utm_medium=copylink

ஒரு வழியாக RS Mangalam(ராஜசிங்க மங்கலம்) யூனியனிலிருந்து ஒரு கிராமத்தை தத்து எடுக்கலாம் என....முடிவு எடுக்கப்பட்டுள்ளது ...
27/01/2015

ஒரு வழியாக RS Mangalam(ராஜசிங்க மங்கலம்) யூனியனிலிருந்து ஒரு கிராமத்தை தத்து எடுக்கலாம் என....முடிவு எடுக்கப்பட்டுள்ளது ......அதற்கான களப்பணிக்கு ஆயத்தமாகியுள்ளோம்.....மேலும் விவரங்களோடு விரைவில் ......

ராமநாதபுரம் மக்களே ....நாம் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரை தத்து எடுப்போமா ....நீர் நிலையில் மிகவும் பின்தங்கிய ஒரு தாலு...
19/01/2015

ராமநாதபுரம் மக்களே ....நாம் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரை தத்து எடுப்போமா ....நீர் நிலையில் மிகவும் பின்தங்கிய ஒரு தாலுகாவை கூறுங்கள் .....அதில் அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம்.....சீமை கருவேலம் ஒழிப்போம் ....மண்வளம் நீர்வளம் காப்போம்....களம் இறங்க நாங்க தயார் ....தோல்கொடுக்க நீங்க தயாரா.....

20/12/2014

மாற்றி யோசி ......
பராமரிப்பின்றி மண்வளம் , நீர்வளம் , மனிதவளம்,காற்றுதன்மை அழிந்தாலும் பரவாயில்லை ......வருவாய் ஈட்டித்தரும் என்ற காரணத்தால் சீமைகருவேலமரங்களை ஊக்குவிக்கும் மக்களே ....சற்று மாற்றி யோசியுங்கள்..
அதே பராமரிப்பின்றி வளரும் தாவரம் jatropha(காட்டு ஆமணக்கு ) , biodiesel plant, சீக்கிரம் பலன் தரும் தாவரம்...இவற்றை மாற்று மரங்களாக ஊக்குவித்தால் மண்வளம்,நீர்வளம் ,.....இவை அனைத்தும் காத்து நம் வாழ்வாதாரத்துக்கும் பயன் பெருமே ....இது ஒரு விஷச்செடி என்ற போதிலும் தகுந்தவாறு பயன்படுத்தினால் மண்வளம் காத்து மக்களும் பயன்படலாம் .....அரசு இதில் தக்க ஆராய்ச்சி மேற்கொண்டு தரிசு நிலங்களை சுத்தம் செய்து இதை ஊக்குவித்தல் நல்ல பயன் அடையலாம்.....அரசும்,மக்களும் ...யோசிப்பார்களா.....

16/12/2014

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம். இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!

"விறகு தேவை என்பதற்காக கருவேலமரம் வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!"

12/12/2014

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! ஆகவே கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம்.

Address

Ramanathapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when முகவைக்கு உயிரூட்டுவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category