Vinayac Green Studio

Vinayac Green Studio , , photography in pondicherry. We have the innovators in our photography field section. They can take a snap with nice angle.

  Photography In PondicherryChennai, Velankanni, Seerkazhi, Mayiladudhuari, Kumbakonam, , Virudhachalam, kallakurichi,ka...
16/09/2015

Photography In PondicherryChennai, Velankanni, Seerkazhi, Mayiladudhuari, Kumbakonam, , Virudhachalam,
kallakurichi,karaikal, cuddalore, Neyveli, Chidambaram, villupuram, Tindivanam, Mantharakuppam,
vadalur, chengalpat, Nagapattinam, Mahabalipuram, Panruti and all over Tamil Nadu.
Wedding & Reception Photography,
Candid Photography, Wedding And Reception Decorations, Reception Decorations, Wedding Decorations, Birthday Decorations,
Stage Decorations, Marriage Decorations, Manamedai Decorations, , Photos and Videos, , Cover Photography, outdoor Photography, Birthday Parties,
Bridal Makeup, Backdrop Decorations, Baloon Decorations, Welcome Hostess, Plantain Tree, Entrance Arch,
DJ Party, Lights & Sounds, Thamboolam, Cab Arrangement, Car Decorations, Orchestra, Dance Troop, Magic,
Mimicry Artists (Sun Tv, Vijay TV), Tatoo, Super Singers(Vijay TV), Get-Together, Corporate Events,
Inaugurations, Product Launch, Conference Meeting, LCD & LED Projectors, Signages, Flex Banners, Mobile Hoardings,
Hoardings and All Kinds of Auspicious events.

Contact:

Mail ID: [email protected]
Mobile No: +91 94880 85050 / +91 97906 75494

  photography in pondicherry, cuddalore, chennai, tindivanam, villupuram, chidambaram, neyveli, chennai, kallakurichi, v...
19/06/2015

photography in pondicherry, cuddalore, chennai, tindivanam, villupuram, chidambaram, neyveli, chennai, kallakurichi, vadalur

Vinayac Green Studio For Photography CONTACT:9790675494

Photographers for Function, Wedding, Birthday, Engagement, Event, Portfolio,Fashion,Model,Candid,Product,Parties,
Outdoor,Candid Wedding, Wildlife,Digital, Industrial,Digital, Children,Commercial, Jewellery, Portrait,Aerial, Catalogue, Tourism, Press,Corporate,Calendar,Conference.

We are a professional photography services company based in Pondicherry . We have been running a professional photography business for5 years, specializing in Christian Wedding, Bridal Portraits, Couple Portraits, Pre-wedding Shoots, Tamil Wedding and Art & Culture photography. We undertake customized photography requirements. Some of our products and services include Blueray Disc, Brochure, Enlargement, Calendar, Frames, Photobook, CD / DVD, HD Highlights, Poster, Coffee Mug, HD Videos, Promo Videos, Coffee Table Book, Lamination, Shortfilms, Live Streaming, Montage and T-Shirt. We provide services in Tamil Nadu. We are proficient in Tamil and English.

Very good morning to all of them, Please read this carefully, because, it's not about the animal only, our life also. Be...
13/06/2015

Very good morning to all of them, Please read this carefully, because, it's not about the animal only, our life also.
Be careful

இந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு,
அமெரிக்கா போக ஆசை வந்தது.
ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தது.
அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது.
ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம்
மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம், "ஏய்... நான் இந்தியாவில்
காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்... ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.
இந்திய இளைஞர்கள் சொந்த நாட்டில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
"நீங்கள் அமெரிக்கா போய் குரங்காக இருப்பதை விட, இந்தியாவில் ராஜாவாக இருங்க...

Sincerely by

Vinayac Green Studio :- 9790675494
The leading photography in pondicherry, cuddalore, chennai and all over Tamil Nadu.

Please read this information about the great leader to leadership the state பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகஇருந்தபோது, ச...
13/06/2015

Please read this information about the great leader to leadership the state

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக
இருந்த
போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.
அப்போது தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச்
சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின்
வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல்
நாட்டியவர்
ஜீவா என்பதால் அவரையும்
அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில்
குடியிருந்தார் ஜீவா.
திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன
காமராஜ்
என்று கேட்டார்".
என்ன நீங்க இந்த வீட்டுல
இருக்கீங்க..? "
என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, "நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன்
என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை உட்கார வைக்க
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும்
நின்று கொண்டே பேசினார்கள்.
"நீ அடிக்கல் வைச்ச
பள்ளிக்கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.
"காமராஜ், நீ முதலமைச்சர், நீ
திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான்
எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்.
"அப்படின்னா நீ முன்னால போ. நான்
அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்" என்றார்
காமராஜர்.
விழாவுக்கு அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.
"என்ன ஜீவா, இப்படி லேட்
பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு காய வைச்சுக்
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார்
காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின்
வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல்,
அவரது கம்யூனிஸ்ட்
நண்பர்களை அழைத்துப்
பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில்
அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.
ஆனா.
நான் கொடுத்தா அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக
இருக்குன்னு சொல்லி மனு போடச்
சொல்லுங்க.
உடனே நான் வேலை போட்டுத் தர்றேன்.
ஆனா,
இந்த விஷயம் வேறு யாருக்கும்
தெரியக்கூடாது.
முரடன், உடனே வேலையை விட
வைச்சுடுவான் "
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத்
தெரியாமல், அவருடைய
மனைவிக்கு வேலை கொடுத்தார்
காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும்
வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய்வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத்
தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.
இனி எங்கே காண்பது இது போன்ற
தலைவர்களை
அடித்தட்டு மக்களோடு மக்களாக
வறுமையை உனர்ந்த, பகிர்ந்த தலைவர் காமராஜர்

Sincerely by

Vinayac green studio :- 9790675494
The leading photography in pondicherry, cuddalore, chennai, villupuram, tindivanam, kallakurichi

Very very good morning to all . Please share this information to all of them, to help the suffering children across your...
09/06/2015

Very very good morning to all . Please share this information to all of them, to help the suffering children across your home, city.

Sincerely by
Vinayac Green Studio:- 9790675494

The leading photography in pondicherry, cuddalore, chennai, villupuram

ஹிட்லரின் கடைசி நிமிடம்நெருங்கிய நண்பர்கள் கடைசி நேரத்தில் குழிபறித்தனர். இறப்பதற்கு 42 மணி நேரத்திற்கு முன்பு காதலியை த...
08/06/2015

ஹிட்லரின் கடைசி நிமிடம்
நெருங்கிய நண்பர்கள் கடைசி நேரத்தில் குழிபறித்தனர். இறப்பதற்கு 42 மணி நேரத்திற்கு முன்பு காதலியை திருமணம் செய்து கொண்டது என பரபரப்பான திருப்பங்கள் நிறைந்தது, அடால்ப் ஹிட்லரின் வாழ்க்கை.
உலகின் உயிரை கொடூரமாக பறித்தவருக்கு தனது அன்பு மனைவியின் உயிர் தன் கண்முன் பிரிவதை காண வேண்டிய பரிதாப சூழ்நிலை. ரஷியப் படை பெர்லினை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. நம்பியவர்கள் எல்லாம் கைவிட்டு விட்டார்கள்.
இனி போரிட்டு ஜெயிக்க முடியாது என்பது ஹிட்லருக்கு தெரிந்தது. தன்னுடன் இருந்த அதிகாரிகளை எங்காவது போய்விடுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
காதலி ஈவாபிரவுனுடன் தனியறைக்கு செல்லும் ஹிட்லர், காதலியின் விருப்பத்துக்கு இணங்க திருமணம் செய்து கொள்கிறார். சிறிது நேரத்தில் ரஷிய படைகள் 300 மீட்டர் தூரத்தில் நெருங்கி விட்டன. ஈவா பிரவுன் சயனைடு சாப்பிட்டு வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்தார்.
ஹிட்லரோ துப்பாக்கியை வாயில் வைத்து, மூளை சிதறும்படி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார்.
இவர்கள் மட்டுமல்ல, தோட்டக்காரர், சமையல்காரர், கார் டிரைவர் போன்றவர்கள் ஹிட்லரின் இறுதி மூச்சு பிரியும் வரை கூடவே இருந்து, கூடவே சேர்ந்து தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டார்கள். வாழ்நாள் முழுவதும் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் கடைசி நேரத்தில் தற்கொலை முடிவை எடுப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது.
ரஷியப் படைகள் ஹிட்லர் தங்கியிருந்த நிலவறையை நெருங்குவதற்கு முந்தைய நாள் தான் இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியும், அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டு ஆடைகளை அவிழ்த்து தலைகீழாக தொங்க விடப்பட்டார்கள். அவர்களது
பிணங்களை பொதுமக்கள் கல்லால் அடித்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டார்கள்.
ரஷிய படையிடம் சிக்கினால் தனக்கும் அதே கதிதான் என்பதை உணர்ந்த ஹிட்லர் தற்கொலை முடிவை எடுத்தார். தனது உடல் கூட எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக இறந்தவுடன் எரித்து விட தனது உதவியாளர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார்.
அதேபோல் ஹிட்லரின் சாம்பலை மட்டுமே ரஷியப் படைகளால் கைப்பற்ற முடிந்தது.

இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒரு நாள் சாலை ஓரம் நடந்து சென்ற போது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்...
06/06/2015

இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒரு நாள் சாலை ஓரம் நடந்து சென்ற போது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார் உடனே அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொணடு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன்னுடனே வளர்து வந்தார்.

ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஓருதாய் பிள்ைள போல பழக ஆரம்பித்துவிட்டனர் இப்படியே வருடங்கள் உருண்டோடின அப்பொழுதுதான் அந்த துயரம் நிகழ்ந்தது. திடீரென்று ஓரு நாள் அவரை மரணம் ஆட்கொண்டது அவரது உறவினர்கள் அவருக்கு சடங்கு முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது அந்தபாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவே இல்லை.

உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் அந்தபாம்பு அவர்உடலை வடவில்லை பிறகு வேறு வழி இல்லாமல் அந்தபாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர்

இந்தசம்பவம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் நீரை வார்த்தது. இந்த ஜீவனுக்குஇருந்த பாசம் அன்பு நம்மில் பலருக்கு இல்லாதது ஏனோ....!!!

Please read this information about the women in the societyஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? எ...
06/06/2015

Please read this information about the women in the society

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்ற பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே
`சாவி' கொடுத்த பொம்மை மாதிரி ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.
* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
படுக்கையறையில் மனம் சங்கடபடும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... காசு அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பூங்கா, கடற்கரை, படம் பாரக்க என்றும் வருடத்திற்கு ஒருமுறையாவது வெளி சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்

Please share and likes this page

Sincerely by

Vinayac green studio:- 9790675494
The leading photography in pondicherry, cuddalore, chennai, tindivanam

Please read this carefull and follow in your life to protect our eyes.பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கிய...
04/06/2015

Please read this carefull and follow in your life to protect our eyes.

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகளை சாப்பிடவேண்டும் .

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை கண் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.

கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

கறிவேப்பிலை, கேரட் கண்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது . இவை இரண்டும் கண்களின் காலலனாக விளங்குகிறது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

Vinayac Green Studio For Photography CONTACT:9790675494

Good morning to all other friends.  Now, I am going to share one beautiful information with you .Please read this inform...
04/06/2015

Good morning to all other friends. Now, I am going to share one beautiful information with you .
Please read this information.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.

அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.

கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.

கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படி பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்.

கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒருபோதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.

ஒருதடவை பாண்டிச்சேரியில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தபோது அவரை தெருவில் தள்ளி அடித்து சாக்கடையில் வீசிவிட்டுப் போனார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து போய் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த வீட்டுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் யார் தெரியுமா?

அவரை அடிப்பதற்கு யார் ஆட்களை அனுப்பினார்களோ அவர்களே உள்ளே இருந்தார்கள். அங்கிருந்து தப்புவதற்கு அவர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை விளக்க வேண்டியதில்லை.

இப்படியெல்லாம் அடிபட்டுத் தொல்லைகள் மிகத் தாங்கியவர் கலைஞர். கல்லக்குடி போராட்டத்தில் உயிரை வெல்லமாக நினைக்காமல் தண்டவாளத்தில் முதலில் படுத்தவர் கலைஞர்.

இந்தத் தியாகம் மிகுந்த அனுபவங்களை எல்லாம் பெறும்போது அவர் இப்படி ஒருநாள் தமிழகத்தின் முதல்வராக ஆகப் போகிறோம் என்று அப்படியெல்லாம் தொல்லைப்பட்டவரல்ல.

தமிழ் காக்க வேண்டும்; தமிழ்மானம் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பல்லாண்டு காலம் ஓயாது உழைத்துச் செய்த தியாகத்தின் பலனாக இன்று அவரைத்தேடிப் பதவி கிடைத்திருக்கிறது.

சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகிவிடுகிறது. ஆனால் நமது கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. ஏழை எளியவரின் நம்பிக்கை எல்லாம் அவரது விழிகளை நோக்கி உயர்கின்றன.

கலைஞர் பெற்றுள்ள நல்ல அனுபவம், திறமை, செயலாற்றல், அறிவுணர்வுகள் எல்லாம் இந்தத் தமிழ் மண் நலம் பெறும்படி பரிமளிக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புகளையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள் எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது. எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் அவர்.

கட்சியின் ஒவ்வொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார்.

தமிழகத்தின் முதல்வர் என்னும் முறையில் நல்ல நிர்வாகத் திறமையோடு கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கத்தை நடத்திச் செல்கிறார் கலைஞர். எல்லாத் தரப்பினருக்கும் தேவையான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.

எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங்களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்றலுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் அவருக்கு இப்போதுள்ள முதல்வர் பதவி மட்டும் போதாது. இன்னும் உயரிய பதவிகள் எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும்.

Please share and likes this page.

Vinayac green studio :-9790675494

The leading photography in pondicherry, cuddalore, chennai, tindivanam

இப்போ இது ரொம்ப முக்கியமான ஒன்னு, இது பாலலோ பண்ணுங்க நல்ல இருக்கும்இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்ப...
02/06/2015

இப்போ இது ரொம்ப முக்கியமான ஒன்னு, இது பாலலோ பண்ணுங்க நல்ல இருக்கும்

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆண்களே! உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!! ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம். எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப வெற்றிலை போடுங்க... சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.

எலுமிச்சை, எலுமிச்சங்காய் எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்

please share and likes this page

Vinayac Green Studio For Photography CONTACT:9790675494

இனிய காலை வணக்கம் உங்களுக்காக நான் இப்போது சொல்ல போகும் தகவல் உங்களக்கு முன்பே தெரிந்தது தான், இருப்பினும் இன்னொரு முறை ...
02/06/2015

இனிய காலை வணக்கம் உங்களுக்காக நான் இப்போது சொல்ல போகும் தகவல் உங்களக்கு முன்பே தெரிந்தது தான், இருப்பினும் இன்னொரு முறை தெரிந்துகொள்ளுங்கள்.

எத்தனையோ பாடல்களில் இளையராஜா!!

அவர் வாசித்த பாடல்களில் உங்களுக்கு பிடித்த, நீங்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் பகிருங்களேன்!!

பண்ணைப்புரத்து ஞானதேசிகன் தான் இன்று காதல் ராகங்களின் தலைவன் இசைஞானி இளையராஜா! அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி 950க்கும் மேற்பட்ட படங்களில் 4500க்கும் மேற்பட்ட பாடல்கள். காதல்,நட்பு, பிரிவு சோகம் என எல்லாவித சூழலையும் ஆக்கிரமிப்பது இளையராஜா பாடல்கள் தான். லவ் பண்ணனும்னு முடிவு பண்னவொடன லவ் பண்ண பொண்ணு கிடைக்கிதோ இல்லையோ இளையராஜா பாட்டு கிடைக்கும். அது கிடைச்சா லவ் தானா வரும். காதலிக்கும் இந்த காலத்து இளைஞனின் காதல் பற்றிய முதல் அனுபவம் இதுவாகத்தான் இருக்கும்.

இன்றைக்கும் ஒருத்தன் காதலிக்க ஆரம்பிச்சா அந்த பொண்ண பாத்தவொடன "பேக்ரவுண்டுல ராஜா சார் சாங் கேக்கும்"னு தான் சொல்லுறான். அதே காதலி பிரிஞ்சு போனவொடன ''வர வர காதல் கசக்குதய்யா"'னு ஃபீல் பண்ணுறான், காதல் இளையராஜா பிரிக்கணும்னு நினைச்சாலும் பிரிக்க முடியாத விஷயமா மாறி இருக்கு. இன்னிக்கு அவர் பசங்களயும் சேர்த்து ஆயிரம் மியூசிக் டைரக்டர், இன்னும் பத்து வருஷத்துக்கு வரபோற மியூசிக் டைரக்டர் எவ்வளவு பேர் வந்தாலும் காதல்னா இளையராஜா பாடல் தான் மனசுல வந்து நிக்கும். இன்னும் எத்தனையோ காதலர்களுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் இளையராஜா தான் வாசிக்க போகிறார்.

அவர் வாசித்த பாடல்களில் உங்களுக்கு பிடித்த, நீங்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் பகிருங்களேன்!!

அதிகம் பகிருங்கள் நண்பர்களே, please likes this page.

Vinayac Green Studio :-9790675494

Address

26a, III Cross Street, East Brindavanam
Pondichéry
605013

Alerts

Be the first to know and let us send you an email when Vinayac Green Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share