15/08/2026
சுதந்திர தினம்!
இன்றைய தலைமுறைக்கு இது ஒரு கொண்டாட்ட நாளாகவோ, விடுமுறை நாளாகவோ இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்கள் தம் இன்னுயிரையும், உடமைகளையும், வாழ்வையும் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தின் நினைவு நாள்.
நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரம், யாரும் நமக்கு அளித்துச் சென்ற பரிசல்ல. சொல்லொண்ணாத் தியாகங்களால் போராடிப் பெற்ற உரிமை!
அந்த சுதந்திர வேட்கையுடன் நாடெங்கும் போராடிய வீரர்களின் வரிசையில், கொங்கு மண்ணில் நம் இனத்தின் மானத்திற்காகவும், உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரன் "தீரன் சின்னமலை" அவர்களின் தியாகத்தை இந்நாளில் நெஞ்சில் நிறுத்துவோம்.
சுதந்திரம் என்பது நினைத்ததைச் செய்வதற்கான உரிமையல்ல;பொறுப்புடன் வரம்புகளை மதித்து வாழ்வது என்பதை உணர்வோம்.
மாவீரன் தீரன் சின்னமலை நினைவுடன்,
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
சுதந்திரம் நமக்கு உரிமையைத் தந்தது; பாரம்பரியம் நமக்கு பொறுப்பைத் தருகிறது. அந்தப் பாரம்பரியம் தலைமுறைகள் கடந்து தொடரட்டும்…
🌐 www.kongudheeranmanamalai.com
📞 89031 20202 / 96887 45710
வந்தே மாதரம்!