14/04/2025
#இன்றைய_தலைப்புச்_செய்திகள்!
◘ சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள், தமிழ்நாட்டில் இன்று சமத்துவ நாளாக கொண்டாட்டம். ரூ.332 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
◘ தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலாகிறது. தடைக்காலம் முடிவதற்குள் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு தீர்வு காண மீனவர்கள் வலியுறுத்தல்.
◘ பல்கலைக்கழங்களின் வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனைக் கூட்டம். தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்பு.
◘ வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம். தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டு கவன ஈர்ப்பு.
◘ தாமே பாமக தலைவர் என அறிவித்த ராமதாஸ், பொதுக்குழுவைக் கூட்ட தீவிர முயற்சி எனத் தகவல். ராமதாஸ் உடனான மோதல் போக்கு குறித்து பாமக தலைவர் அன்புமணி மழுப்பல் பதில்.
◘ திருத்தணி, மதுரை, ஈரோடு, திருச்சியில் வெயில் சதம் அடித்ததால், மக்கள் அவதி. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எச்சரிக்கை.
◘ தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏ.ஆர்.ரஹ்மான். டிஜிட்டல் வடிவில் உள்ள நினைவுச் சின்னம், விரைவில் கட்டிடமாக வரக்கூடும் என நம்பிக்கை.
◘ காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல். தாக்குதலால் சாலைகளில் நிர்கதியாக தவிக்கும் உள் நோயாளிகள்.
◘ இந்தியாவில் ஐபோன்களின் தயாரிப்பு கணிசமாக அதிகரிப்பு. சீனா - அமெரிக்கா வர்த்தகப் போரால், இந்திய உற்பத்தித் துறையில் வளர்ச்சி.
◘ நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கு முதல் தோல்வியை தந்த மும்பை. மற்றொரு லீக் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு 4-ஆவது வெற்றியை பதிவு செய்தது.
◘ ஐ.பி.எல். லீக் போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் இன்று மோதல். தொடர் தோல்விகளுக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என எதிர்பார்ப்பு.