Sri hare rama hare krishna catering service

Sri hare rama hare krishna catering service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri hare rama hare krishna catering service, Caterer, Dharmapuri.

அவல் புட்டு ...தேவையான பொருட்கள்அவல் 1/2கிலோபாகு வெல்லம் 1/2கிலோதேங்காய் துருவல் 1கப்ஏலக்காய் 6 பொடித்ததுமுந்திரி 10நெய்...
15/10/2018

அவல் புட்டு ...

தேவையான பொருட்கள்

அவல் 1/2கிலோ

பாகு வெல்லம் 1/2கிலோ

தேங்காய் துருவல் 1கப்

ஏலக்காய் 6 பொடித்தது

முந்திரி 10

நெய் 4ஸ்பூன்

செய்முறை
அவலை நன்கு சுத்தம் செய்து கடாயில் 2sp நெய்விட்டு வறுக்கவும்..
லேசாக சிவந்ததும் கீழே இறக்கி ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு சூடாக்கி பொடித்த அ அவலில் சிறிது சிறிதாக சேர்த்து பிசறி வைத்து நன்றாக அழுத்திவைத்து 2 ,3மணிநேரம் மூடி வைக்கவும்..
கடாயில் வெல்லத்தை பொடித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பாகு வைக்கவும் ..நல்ல கம்பி பதம் வந்தவுடன் அவலில் சேர்க்கவும்.. கொஞ்சம் நெய்யில்முந்திரியை வறுத்து ,போட்டு ஏலக்காய் சேர்க்கவும்...ஆற ஆற உதிரி உதிரியாக வந்துவிடும்...இந்த நவராத்திரி வெள்ளிக்கிழமை செய்து
அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்யவும்...

துவரம் பருப்பு கிச்சடி 🌀பொதுவாக மதிய வேளையிலும் சரி, காலையிலும் சரி பெரும்பாலானோர் கலவை சாதம் செய்து, அத்துடன் ஏதேனும் ச...
10/10/2018

துவரம் பருப்பு கிச்சடி 🌀

பொதுவாக மதிய வேளையிலும் சரி, காலையிலும் சரி பெரும்பாலானோர் கலவை சாதம் செய்து, அத்துடன் ஏதேனும் சைடு டிஷ்களை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பர். அவ்வாறு நினைப்பவர்களுக்கு கிச்சடி சரியானதாக இருக்கும். அதிலும் கிச்சடியில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான துவரம் பருப்பை வைத்து எப்படி ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிச்சடியை செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப் (ஊற வைத்து, கழுவியது)
துவரம் பருப்பு - 1 கப் (ஊற வைத்து கழுவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 100 கிராம் (நறுக்கியது)
பட்டாணி - 100 கிராம்
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் சீரகம், வர மிளகாய், பச்சை மிளகாய், பிரியாணி இலை போட்டு, தாளிக்க வேண்டும். அடுத்து, அத்துடன் துருவிய இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் துவரம் பருப்பு போட்டு, 2 நிமிடம் கிளற வேண்டும். பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். இறுதியில் 3 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி கொதித்ததும், குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான துவரம் பருப்பு கிச்சடி ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.🌀

அசோகா அல்வா🌀தேவையானவை:  கோதுமை மாவு - கால் கிலோ பயத்தம்பருப்பு - 100 கிராம் சர்க்கரை - 500 கிராம் ஏலக்காய்த்தூள் - ஒரு ட...
10/10/2018

அசோகா அல்வா🌀

தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ
பயத்தம்பருப்பு - 100 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
நெய் - 100 கிராம்
உடைத்த முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை வறுத்து குக்கரில் குழைய வேகவிடவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு வாணலியில் பாதியளவு நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்து, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் பயத்தம்பருப்பு சேர்த்துக் கலந்து சர்க்கரை சேர்த்து, இடையிடையே நெய்விட்டு, சேர்ந்து கலந்து வரும்போது ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து... ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு தூவி இறக்கவும்.🌀

நவராத்திரி ஸ்பெஷல் பாசிப் பருப்பு சுண்டல் தேவையான பொருட்கள்பாசிப் பருப்பு – ஒரு கப் (வேகவைத்தது)மஞ்சள் தூள் – கால் டீஸ்ப...
10/10/2018

நவராத்திரி ஸ்பெஷல் பாசிப் பருப்பு சுண்டல் தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு – ஒரு கப் (வேகவைத்தது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

பொடி செய்ய:

கொத்தமல்லி – ஒரு கைப் பிடி

பச்சை மிளகாய் – ஒன்று

இஞ்சி – ஒரு துண்டு

அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – ஒன்று

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.

பின், பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

வேப்பம் பூ பச்சடி
11/07/2017

வேப்பம் பூ பச்சடி

ஸ்ரீஹரேஸ்ரீநிவாஸா
26/12/2016

ஸ்ரீஹரேஸ்ரீநிவாஸா

நவராத்திரி ஸ்பெஸல் ஸ்வீட் சுருள் முறுக்கு
03/10/2016

நவராத்திரி ஸ்பெஸல் ஸ்வீட் சுருள் முறுக்கு

29/09/2016
சப்பாத்தி தயாரிப்பில்
07/09/2016

சப்பாத்தி தயாரிப்பில்

ஸ்ரீஹரேஸ்ரீநிவாஸா
02/08/2016

ஸ்ரீஹரேஸ்ரீநிவாஸா

ஸ்ரீஹரே ஸ்ரீநிவாஸா
23/06/2016

ஸ்ரீஹரே ஸ்ரீநிவாஸா

Address

Dharmapuri
636809

Telephone

9994790750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri hare rama hare krishna catering service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category