Iyarkai KUDIL COVAI

Iyarkai KUDIL COVAI கோவை மக்களின் வேண்டுகோளின் படி "இ?

11/08/2024
தென்னியந்தய பாரம்பரிய பாசுமதி அரிசி பவானி அரிசியின் நன்மைகள்:தென் இந்தியாவின் கங்கை என போற்றப்படும் காவிரி நதிக்கரையில் ...
27/10/2015

தென்னியந்தய பாரம்பரிய பாசுமதி அரிசி பவானி அரிசியின் நன்மைகள்:

தென் இந்தியாவின் கங்கை என போற்றப்படும் காவிரி நதிக்கரையில் உள்ள நகரம் பவானி இங்கு 3 ஆறுகள் சங்கமிக்கும் ( காவிரி, பவானி, புமித்ரா என பூமியின் அடியில் உருவாகும் சுழல் நீர்)

இதனால் இங்குள்ள மண்ணில் இயற்கையாகவே நிறைய சத்துகள் நிறைந்துள்ளன , இந்த மண்ணில் உருவான பாரம்பரிய நெல் ரகம்தான் பவானி.

இந்த பவானி அரிசி சாப்பாடு மிகவும் சுவையாகவும், அரிசியின் அலகு மிக நீண்டும் பாசுமதியை போல காணப்படும், இதில்
கார்போஹைட்ரட் மிதமாகவும், இதில் காரோட்டின் சத்துகள் மிக அதிகமாக காணப்படும் . இது கைகுத்தல் சாதமாக வடித்து சாப்பிட்டால் நமது உடலுக்கு தேவையான காரோட்டின் மிக அதிக அளவில் கிடைக்கும்,இதனால் நம் உடல் சோர்வு அடையாமல் நீண்ட நேரம் உற்சாகமாக இருக்கும்.

இந்த அரிசி சாதத்தை சாப்பிட்டு முடித்து உடன் சாப்பிட்ட களைப்பு இல்லாமல் இருக்கும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட பவானி அரிசியை விட்டுவிட்டு, எங்கோ விளைந்த உயர் ரக அரிசியான பாசுமதியை சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் ஜீரணம் ஆகாமல் தவித்து கண்ட கண்ட குளிர் பானங்களை ( விஷங்களை) குடித்து உடலை கொடுத்து கொள்கிறோம்.

இந்த பவானி அரிசியின் உண்மையான உணவு பருக்கைகளை நேரடியாக படம் பிடித்து காட்டியுள்ளோம்.

இச்சுவையான பாரம்பரிய பவானி பாசுமதி அரிசி இயற்கை குடிலின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.

என்றும் மக்கள் நலனில்
இயற்கை குடில்

தேங்காய் எண்ணெயின்  வரலாறு :"சுவையைவிட, மருத்துவ பயனை வைத்தே உணவு பொருட்களை கொண்டாடும் நம் முன்னோர்கள், தேங்காய்  தீயது ...
25/10/2015

தேங்காய் எண்ணெயின் வரலாறு :

"சுவையைவிட, மருத்துவ பயனை வைத்தே உணவு பொருட்களை கொண்டாடும் நம் முன்னோர்கள், தேங்காய் தீயது என்றால் அப்போதே ஒதுக்கியிருப்பார்கள். ஆனால் சித்த ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் அதன் எண்ணெய்கள் அதிக பயன்பாட்டில் இருந்து வந்தன.

இந்த தேங்காயின் ராஜ்யத்தை, 1970 ம் ஆண்டுகளில் மாற்றியது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆலிவ் எண்ணெய்யும் , சூரிய காந்தி எண்ணெய்யும் சந்தைபடுத்துவதில் வெற்றி கண்டு, தேங்காயின் ஆளுமையை குறைத்தன...

இக்காலத்தில் வாழும் மக்கள் தேங்காயில் அதிக கொழுப்பு சத்து இருப்பதால் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சாப்பிட கூடாது என்பார்கள். ஆனால் எந்த ஒரு தாவர எண்ணெய்லிருந்தும் கொலஸ்ட்ரால் நேரடியாக இரத்தத்தில் கலப்பதில்லை,நெய் மற்றும் புலால் உணவுகளால் மட்டுமே நேரடியாக இரத்தத்தில் கலக்கிறது. மேலும்

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட கூடிய 'மோனோலோரின்' எனும் வேதி பொருள் தேங்காயில் தான் அதிகமாக உள்ளது, இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன் இரத்த கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் தவிர இந்த சக்தி இயற்கையாக கிடைக்கும் இன்னொரு இடம் தாய்ப்பால் மட்டுமே !

"தேங்காயை அதிகம் சேர்க்க கூடாது" 'ஆகாது ' என்று கூறுபவர்களுக்கு நிச்சயம் இதயம் நோய் வரும் , இரத்த நாளங்களில் ஏற்படும் வெடிப்பு மற்றும் இதய இரத்த குழாய்களில் படியும் கொழுப்புகளை கரைக்க தேங்காய் எண்ணெய், தேங்காய் பாலுக்கு அதிக சக்தி உள்ளது.

இன்று அனைவருக்கும் உடல் உழைப்பு குறைவதே கொலஸ்ட்ரால் சேர்வதற்கு காரணம். உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் சிறிது அளவு தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

மிக சிறந்த குளிர் பானம் இளநீர் இதில் கால்சியம், பொட்டாசியம் , குளுக்கோஸ் நிரம்பியது இது T.N.S ( டெக்டோரின் வித் நார்மல் சலைன் ) கொண்ட ஓர் உணவு பொருள். ஆங்கில மருத்துவ துறையில் உடலுக்கு அவசரமாக உப்பு மற்றும் சர்க்கரை சத்துகள் தேவை என்றால் உடனடியாக கொடுக்க கூடியது இந்த சலைன். இது இளநீரில் நிறைந்துள்ளது. இது மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு சக்தியை கொடுக்க கூடியது.

குழந்தைகளுக்கு இது சத்துணவு:

# தாய்ப்பாலுக்கு பின் முதலில் கொடுக்கப்படும் திட உணவுகள் மற்றும் அரிசி கஞ்சியில் 3 அல்லது 4 துளி தேங்காய் எண்ணெய் சேர்ப்பது வழக்கம் இதற்கு பெயர்தான் (ஹை கலோரி மீல் HCM ) இது குழந்தைகளின் எடையை கூட்டி சருமத்தை வழுவழுப்பாக்கும். ஒல்லியாக இருக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கு, தேங்காய் பால் கொடுக்கலாம்.

# பெண்கள் பலரும் கேசத்துக்கு எண்ணெய் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் பிசுபிசுப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இதில் எந்த வித பயனும் இல்லை.
கொழுப்பை நீக்கி தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் எந்த விதமான எசன்ஸீம் இல்லை. இது நம் கேசத்துக்கு, உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது.

உடல் சூட்டை தணித்து, உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் மிக முக்கிய உணவுப் பொருள் தேங்காய் என்கிறது சித்த மருத்துவம், வயிற்றுப் புண் ஆற, தேங்காய்ப் பால் போல மருந்து எதுவும் இல்லை.

மக்களின் நலனில் என்றும்
இயற்கை குடில்.

15/10/2015

பாரம்பரியத்தை நினைவுட்டும் வகையில் சிறந்த தயாரிப்புகளை மக்களுக்கு வழங்குகிறோம்,

அதன் வகையில் தற்போது மூலிகை கூந்தல் குளியல் பொடி அறிமுகபடுத்துகிறோம்,

21 வகையான இயற்கை மூலிகை தாவரங்களை பயன்படுத்தி மூலிகை கூந்தல் குளியல் பொடியை தயாரித்து உள்ளோம்...

இது இயற்கையாக முடியின் வளர்ச்சியை துண்டுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையை குளிர்ச்சி செய்வதுடன், அல்லாமல் இதில் கலந்து உள்ள பொண்ண கன்னி கீரை கண் பார்வை திறனை அதிகரிகிறது....

வெளி நாட்டு நிறுவன தலை பூச்சுகளில் (ஷாம்பு) இராயனங்கள் அதிக அளவில் இருப்பதால் அது நமது முடிகளின் வேர்களை பாதித்து முடியை உதிர செய்கிறது......மட்டுமல்லாமல் இயற்கையான கருமை நிறத்தை இழக்க செய்கிறது...

21 வகையான இயற்கை மூலிகைகள்:

1. அரப்பு இலை (தலை மற்றும் உடல் குளிர்ச்சி பெற)

2. வெள்ளை கரிசாலை ( இரும்பு சத்து )

3.செம்பரத்தை பூ மற்றும் இலை (முடி கருமை பெற)

4. சியக்காய் ( தலையில் உள்ள அழுக்கை நீக்க )

5.மகிழம் பூ ( முடி வளர்ச்சி மற்றும் மணம் பெற)

6.நெல்லி முள்ளி ( தலை குளிர்ச்சி மற்றும் முடி வளர்ச்சி )

7.ஆவாரம் பூ ( முடி பளபளக்க )

8.மரிக்கொழுந்து ( முடி மணக்க )

9.புங்க்காய் ( தலை அரிப்பை நீக்க )

10. பூச்சக்காய் ( முடியில் நுரை வர )

11.வேம்பு ( தலைப்புண் மற்றும் அரிப்பு நீங்க )

12.மறுதாணி இலை ( முடி கறுமை மற்றும் தலை குளிர்ச்சி )

13.அம்மையார் கூந்தல் ( நன்கு முடி வளர்ச்சி )

14.பூலாங் கிழங்கு ( முடி வேர்கள் பலம் பெற)

15.கறிவேப்பிலை ( இயற்கையான கருமை , வேர்கள் பலம் பெற)

16.வெந்தயம் ( தலை, உடல் குளிர்ச்சி )

17.கடுக்காய் பொடி ( பொடுகு, அரிப்பை போக்க )

18. அதிமதுரம் (தலை குளிர்ச்சி , பொடுகு போக்க )

19.பயித்த மாவு ( முடி அழுக்கை போக்க )

20. பொண்ண கன்னி இலை ( முடி பலம் பெற, கண் பார்வை தெளிவு பெற )

21.வெட்டி வேர் ( இயற்கையான மணம், முடி மெண்மை பெற )

இவை அணைத்தும் நன்கு காய வைத்து பின் சரியான விகித்தில் கலந்து நன்கு அரைக்கப்பட்டுயுள்ளது....

இவை அனைத்தும் விகதாசார அடிப்படையில் கலந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப் படுகிறது.

இவற்றில் கலந்துள்ள மூலிகைகள் அனைத்தும் நன்கு முடி வளர உதவும், முடி உதிராது, பெண்களுக்கு முடி வாரும் போது சிக்கல் வராது. முடி உடையாது,

பொன்னாங் கன்னி கிரை மற்றும் .கறிவேப்பிலை கலந்துள்ளதால் கண்கள் நன்கு குளிர்ச்சி அடைவதுடன் கண் பார்வை நன்கு தெளிவு பெறுவதுடன் கண் நரம்புகள் நீண்ட ஆயுளை பெறும்.

அதிமதுரம் மற்றும் பொடுதலை, கடுக்காய், கலந்துள்ளதால் தலையில் உள்ள பொடுகு, அரிப்பு, தலைப்புண் அனைத்தும் சரியாகும்.

இயற்கை நெல்லி, வெந்தயம், வெட்டிவேர், கலந்துள்ளதால் முடிக்கு தேவையான அனைத்து உயிர் சத்துகள் கிடைப்பதுடன் , உடல் மற்றும் தலை , மூளை, கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் இரவில் நன்கு ஆழ்ந்த உறக்கம் வரும்,டென்சன் குறையும்.

வெள்ளை கரிசாலை, செம்பருத்தி, மருதாணி,.அம்மையார் கூந்தல், கலந்துள்ளதால் முடியின் வேர்கள் நன்கு பலமடைவதுடன் முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தருகிறது, மேலும் முடி உடையாமல் நீண்ட அடர்த்தியாக வளர உதவுகிறது.

எமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களின் தலைமுடி பிரச்சனைகளை தீர்த்து வைத்து வெற்றி கண்டுள்ளது

எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை.....
தயவுசெய்து வெளி சந்தையில் விற்கும் இராசயன ஷாம்புகளுடன் உடன் எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை ஒப்பிடாதீர்கள்..

இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை வாங்குகள்.

இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடி விலை - . Rs.75/250gm

Rs. 150 / 500 gm, Rs.300/ 1kg

பொது மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்......

இயற்கை குடில்™ கோவை கிளை முகவரி:

9944944595

https://www.facebook.com/Iyarkai-KUDIL-COVAI-1652238565020360/

கோவை மக்களின் வேண்டுகோளின் படி "இ?

பசுமை விகடன் வேளாண் கண்காட்சி 2015இடம் : ஈரோடு,வ.உ.சி. மைதானம். ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.தேதி : 25 - 9 -15 , 26 , ...
23/09/2015

பசுமை விகடன் வேளாண் கண்காட்சி 2015

இடம் : ஈரோடு,வ.உ.சி. மைதானம். ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.

தேதி : 25 - 9 -15 , 26 , 27 , 28 - 9 - 15 வரை

வெள்ளி, சனி,ஞாயிறு , திங்கள்

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை

வேளாண் கண்காட்சியை காண அனைவரையும் இயற்கை குடில் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்....

மிக தரமான , மிக குறைவான விலையில் இயற்கை வழி வேளாண் பொருள்கள் நமது இயற்கை குடில் விற்பனை மையத்தில் ......

நமது இயற்கை குடில் விற்பனை மையம் (ஸ்டால் )எண் : 9

இந்தியாவில் முதல் முறையாக பாரம்பரிய பயிரான பச்சை குண்டு உளுந்து விற்பனை செய்யப்படுகிறது.

மிக தரமான விலையில் செம்மண் கட்டிய துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.

Address

Coimbatore

Telephone

9944944595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iyarkai KUDIL COVAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category