KaRth Media

KaRth Media Heartily welcome to our KaRth Media. We ready to Entertain you by our Tasteful Photographs & Thoughtful Writings. Your Comments & Suggestions are welcome.

*அரேபிய நாட்டு பாலைவனம்*அதிகாலை மணி 05:16, சவுதி அரேபியா நாட்டின் தம்மம்-குவைத் அதிவேக நெடுஞ்சாலை.அரேபிய நாட்டு பாலைவனத்...
02/07/2019

*அரேபிய நாட்டு பாலைவனம்*

அதிகாலை மணி 05:16, சவுதி அரேபியா நாட்டின் தம்மம்-குவைத் அதிவேக நெடுஞ்சாலை.

அரேபிய நாட்டு பாலைவனத்தின் அதிகாலை வெற்றிடத்தை தன் ஆக்ரோஷமான வெப்பத்தால் வென்றுக் கொண்டிருக்கும் அந்த சூரியனை பின்னுக்குத்தள்ளி, மேற்கே நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது அந்த டொயோட்டா பிக்அப்.

சன்னல் ஓரமாய், ஒரு கப் தேநீருடன்,
இந்த புதியதோர் நாளை தொடங்கி கொண்டிருக்கிறான் ஓர் இயந்திர(வியல்) இளைஞன்.

அந்த பாலைவனச்சோலையில் வேறென்ன செய்திடல் இயலும்😏

*செக்கச்சிவந்தது வானம்*அது ஒரு குளிர்காலை நேரம், வானத்து தேவதைகள் உலாவரும் காலம்,குளிர்கால இளவரசியின் பேரழகை கண்டு காதல்...
23/11/2018

*செக்கச்சிவந்தது வானம்*

அது ஒரு குளிர்காலை நேரம்,
வானத்து தேவதைகள் உலாவரும் காலம்,
குளிர்கால இளவரசியின் பேரழகை கண்டு காதல் கொண்டு செக்கச்சிவந்தது வானம்.
***
-கவிதைக்காரன் கார்த்தீ

"விடியும் என்று விண்ணை நம்பு,முடியும் என்று உன்னை நம்பு"நாளை நிச்சயம் நமதே :-)இனிய காலை வணக்கங்கள்
03/09/2018

"விடியும் என்று விண்ணை நம்பு,
முடியும் என்று உன்னை நம்பு"

நாளை நிச்சயம் நமதே :-)

இனிய காலை வணக்கங்கள்

*கனாகானும் காலமிது*கனவாய் களைந்திட கூடாதா,நீ தொலைந்து சென்ற நிமிடங்கள்.என் நினைவில் என்றும் நீ இருப்பாய்,என்ற நினைப்பு உ...
23/06/2017

*கனாகானும் காலமிது*

கனவாய் களைந்திட கூடாதா,
நீ தொலைந்து சென்ற நிமிடங்கள்.
என் நினைவில் என்றும் நீ இருப்பாய்,
என்ற நினைப்பு உன்னுள் இருக்கிறதா?
நானாய் தானடி நானிருந்தேன்,
என்னுள் எப்படி நீ வந்தாய்?
என் கண்களின் ஓரம் நீர் வடிந்தால்,
உன் இதயம் கொஞ்சம் கனக்கிறதா?
உனக்கே சுமையாய் நானிருந்தால்,
என்னை சுமைக்க யார் வருவார்?
காதலென்னும் வேள்வியில் வாழுகின்ற வாழ்விது.

***

-கவிதைக்காரன் கார்த்தீ

*நாற்பதை எட்டும் வெட்பநிலை*கொதிகலனில் வெந்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவன்களுக்கு,அந்த இயற்கதிரவரிடம் மிஞ்சிருக்கின்ற அன்பி...
28/03/2017

*நாற்பதை எட்டும் வெட்பநிலை*

கொதிகலனில் வெந்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவன்களுக்கு,

அந்த இயற்கதிரவரிடம் மிஞ்சிருக்கின்ற அன்பின் கரிசனமே,

இந்த ஆக்ரோஷ தரிசனம்!!!

மாலை நான்குமணிக்கு,
நாற்பதை எட்டும் வெட்பநிலை!!!

மனிதனின் நிலைதான் என்ன???

***
-கவிதைக்காரன் கார்த்தீ :-(

*பாலைவன பயணி*பாலைவன படகில் பிரயாணித்து கொண்டிருக்கும், இந்த யாவரும் விரும்பா யாத்திரைக்காரனின் கதைதான் என்னவோ???புரிந்து...
28/03/2017

*பாலைவன பயணி*

பாலைவன படகில் பிரயாணித்து கொண்டிருக்கும்,
இந்த யாவரும் விரும்பா யாத்திரைக்காரனின் கதைதான் என்னவோ???

புரிந்தும் புரியாமல்,
அறிந்தும் அறியாமல்,
தெரிந்தும் தெரியாமல்,

எங்கேதான் போகுமோ???

யாரிடம் தான் கரைச்சேருமோ???

ஹஹாஹாஹா!!!!!

****
-கவிதைக்காரன் கார்த்தீ :-)

இந்த காலைநேர மூடுவென்பனியும் என்னிடம் உணர்த்தி செல்வது ஒரு வருட முடிவயே :-(***
24/12/2016

இந்த காலைநேர மூடுவென்பனியும் என்னிடம் உணர்த்தி செல்வது ஒரு வருட முடிவயே :-(

***

*வெற்றி கோபுரம் Vs தோல்வி கற்கள்*வெற்றி என்னும் கோபுரம் உயர்ந்திடவேதோல்வி என்னும் கற்களை சுமக்கின்றோம்.கற்சுமையின் அதிகம...
20/12/2016

*வெற்றி கோபுரம் Vs தோல்வி கற்கள்*

வெற்றி என்னும் கோபுரம் உயர்ந்திடவே
தோல்வி என்னும் கற்களை சுமக்கின்றோம்.

கற்சுமையின் அதிகம் உன் கோபுரத்தின் உயரத்தை பொருத்ததே.

நற்காலை வணக்கங்களுடன்

இராஜப்பன் ஐயப்பன் :-)

பெண் என்பவள் அழகே!!!ஆனால், அழகான பெண் என்பவளோ,"கவிதைகாரனின் கற்பனை கடைவீதியில் கண்டெடுத்த கவிச்சரமே",எல்கை இல்லா பிரியமு...
20/12/2016

பெண் என்பவள் அழகே!!!

ஆனால்,

அழகான பெண் என்பவளோ,

"கவிதைகாரனின் கற்பனை கடைவீதியில் கண்டெடுத்த கவிச்சரமே",

எல்கை இல்லா பிரியமுடன் பாடும் அதன் பாக்கள்.

-கவிதைகாரன் கார்த்தீ :-)

*விண்ணுக்கு உயர்ந்த சூரியன்*உறக்கம் இல்லாமல் உழைத்துவிட்டு,ஜன்னலோர வென்பனியும், செங்கதிர் சூரியனும் துரத்தி கொண்டுவர, வே...
20/12/2016

*விண்ணுக்கு உயர்ந்த சூரியன்*

உறக்கம் இல்லாமல் உழைத்துவிட்டு,
ஜன்னலோர வென்பனியும், செங்கதிர் சூரியனும் துரத்தி கொண்டுவர, வேகமாய் பாய்ந்தோடுகிறது என் பாலைவன பஸ்.

தகிஜ் - பரூஷ் 45 கி.மீ பயணம் மிக எளிதாகியது.... இல்லை, இல்லை, பழகிபோகியது.

ஒன்றன் பின் ஒன்றாய் கரும்பை தேடும் எரும்பை போல் பேருந்துகள்.

பல கனவுகளுடன் பாதி உறக்கம் உறங்கும், பயணப்பொறியாளர்கள்.

ஒரு மனி நேர துரத்தல் முடிவுக்கு வந்தது துறவு வாழ்க்கை.

விண்ணுக்கு உயர்ந்த சூரியன், என் தூக்கமில்லா கண்களை பார்த்து சிரிக்கிறான்.

குட் மார்னிங் என்று பிராகாசித்து கொண்டு.

அன்புடன்....

-கவிதைகாரன் கார்த்தீ :-)

*அம்மாவின் அன்பு*பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில்,அம்மாவின் அன்பையும் முந்திக்கொண்டு ஓடுகிறேன்.யார் யாருக்கோ பதில்கள் பல சொ...
20/12/2016

*அம்மாவின் அன்பு*

பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில்,
அம்மாவின் அன்பையும் முந்திக்கொண்டு ஓடுகிறேன்.

யார் யாருக்கோ பதில்கள் பல சொல்லும் இந்த மனித இயந்திரம்,
அவள் ஒற்றை கேள்விக்கு பதில் சொல்ல தினறியது.

நீ இப்போ பார்க்க எப்படிப்பா இருப்ப?

அன்பை விற்றுத்தான் பணம் படைக்கிறான் இந்த பிச்சைக்காரன்.

****

கவிதைகாரன் கார்த்தீ

*தனிமையின் சரித்திரம்*நிழல் கூட நிறம் காட்ட தயங்கும் தருணம்,கடந்து செல்லும் மாலை எல்லாம் கொல்லும் மௌனம்,ஆழ்கடல் மீன்களெல...
20/12/2016

*தனிமையின் சரித்திரம்*

நிழல் கூட நிறம் காட்ட தயங்கும் தருணம்,
கடந்து செல்லும் மாலை எல்லாம் கொல்லும் மௌனம்,
ஆழ்கடல் மீன்களெல்லாம் அலைகள் இன்றி இறக்க,
வெறுமையால் வற்றியது ஆழ்கடல் அன்பு,
தனிமையின் சரித்திரம் புதுக்கவி படைக்க,
ஒரு துளி கண்ணீரில் மூழ்கியது கப்பல்.

***

Address

Bharuch
392001

Telephone

+97450587415

Website

Alerts

Be the first to know and let us send you an email when KaRth Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share