05/21/2026
🛑 21 May இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள். 🛑
#80ல் #இலங்கை #ஜனாதிபதியும் #இந்தியப் #பிரதமரும்!
திட்டமிட்டுக் கட்டவிழ்க்கப்பட்ட இனக்கலவரத்தில் காடையர்களால் சூறையாடப்பட்டு, உடமைகள் மற்றும் உயிர் அழிவுகளுக்குள் அகப்பட்டு, நிர்க்கதியாய் நின்ற தமிழர்களை பார்த்து...
“போர் என்றால் போர்;
சமாதானம் என்றால் சமாதானம்.!"
1983ல் இலங்கை ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா தேசிய தொலைக்காட்சியில் தோன்றி கொக்கரித்தார்.
சீக்கிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில், 8000க்கும் அதிகமான சீக்கிய மக்கள் கொல்லப்பட்டு கிடக்கையில்…
“When a big tree falls, the earth shakes."
பெரிய மரமொன்று தரையில் விழுந்தால், அதன் அதிர்வுகள் பூமியில் இருக்கும்."
1984ல் அப்படுகொலைகளை நியாயப்படுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் இந்தியப் பிரதமர் இராஜிவ் காந்தி.
1987ல் இந்த இரண்டு பெரும் (மு)தலைகளும் கூட்டுச் சேர்ந்து உருவாக்கியதே “இந்திய இலங்கை ஒப்பந்தம்”.
வெளியில்.. பெரிதும் பேசப்படாத (மு)தலைகளின் திட்டங்கள் 👇🏽
இராஜிவ் திட்டம்: பெருமளவான சீக்கிய சிப்பாய்களை போரில் காவு கொடுப்பது.
ஜெ.ஆர் திட்டம்: சிங்கள சிப்பாய்களை காவு கொடுக்காமல், இந்திய படைகளைக் கொண்டு தமிழர்களை அழிப்பது.
-ஏகலைவன்-