தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-துபாய்

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-துபாய் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-துபாய், Party Entertainment Service, Al Ajman.

 #துபாயில்_தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_நடத்திய_பதிமூன்றாம்_ஆண்டு_இஃப்தார்_நிகழ்ச்சிபர்துபாய் மார்ச் 16, ஐக்கிய அரபு அமீ...
17/03/2025

#துபாயில்_தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_நடத்திய_பதிமூன்றாம்_ஆண்டு_இஃப்தார்_நிகழ்ச்சி

பர்துபாய் மார்ச் 16, ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 48 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய பதிமூன்றாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி பர்துபாய் கிராண்ட் எக்ஸல்சியர் ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் M.S.முஜீபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் தோப்புத்துறை சிறுவர் சிறுமிகள் திருக்குர்ஆன் சூராக்களை மனனம் செய்து ஓதினர்,

சங்கத்தின் செயலாளர் M.S.முகம்மது இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரையாற்றினார், பின்னர்
Dr,M.சாஜிதா MBBS, அவர்கள் மருத்துவத்தின் பார்வையில் ரமலான் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், அதனை தொடர்ந்து
சங்கத்தின் மூத்த உறுப்பினர் பன்னாட்டு தொழிலதிபர் M.சுல்தானுல் ஆரிபீன் அவர்கள், கல்வியின் அவசியமும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்,
இறுதியாக ரமலான் மாத அமல்கள் என்ற தலைப்பில் J.செய்யது அபு ஹக்கீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

மேலும், சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தை பாராட்டியும், சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கியும், குர் ஆனை மனனம் செய்து ஓதிய குழந்தைகளுக்கு நினைவு கோப்பை வழங்கினர், பின்னர் ஜனவரி 2025-ல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பெண்கள் பகுதியை சிறப்பாக ஒருங்கிணைத்த நான்கு பெண்களுக்கு பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை சங்கத்தின் காப்பாளர் M.J.அவுலியா முகம்மது அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார், சங்கத்தின் துணைத் தலைவர் N.A. ஹாஜா மொய்தீன் மற்றும் துணை செயலாளர் ARY.அப்துல் ரெஜாக் அவர்களும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இறுதியாக பொருளாளர் A.ஷாகுல் ஹமீது (Zam Zam) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

#தலைவர்_செயலாளர்_மற்றும்_நிர்வாகிகள்

#இப்தார்_குழுவினர்
#தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_துபாய்

 #துபாயில்_தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_நடத்திய_பன்னிரெண்டாம்_ஆண்டு_இஃப்தார்_நிகழ்ச்சிஅஜ்மான் மார்ச் 31, ஐக்கிய அரபு அமீ...
01/04/2024

#துபாயில்_தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_நடத்திய_பன்னிரெண்டாம்_ஆண்டு_இஃப்தார்_நிகழ்ச்சி

அஜ்மான் மார்ச் 31, ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 47 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய பன்னிரெண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி அஜ்மான் பீச் ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் M.J. அவுலியா முகம்மது அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் தோப்புத்துறை சிறுவர் சிறுமிகள் திருக்குர்ஆன் சூராக்களை மனனம் செய்து ஓதினர்,

சங்கத்தின் செயலாளர் A. அஹமது அனஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற சங்கத்தின் மூத்த உறுப்பினர் பன்னாட்டு தொழிலதிபர் M.சுல்தானுல் ஆரிபீன் அவர்கள் ஒற்றுமையின் முக்கியத்துவமும், ஊரின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார், ISMA நிர்வாகி M.S.M. சாதிக் அலி அவர்கள் மருத்துவ சேவையில் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பேசிய அவர் துபாயில் செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தினால் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கும் அரபிக் கல்லூரி, பள்ளி நிர்வாகம், கல்வி உதவி, மருத்துவ உதவி, விளையாட்டு அரங்கம் மற்றும் பொது நூலகம் போன்ற தொலைநோக்கு திட்டங்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தை பாராட்டியும், சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசும், பொன்னாடை போர்த்தியும் மற்றும் ஜனவரி 2024-ல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பெண்கள் பகுதியை சிறப்பாக ஒருங்கிணைத்த நான்கு பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது. நெகிழ்ச்சியான நிகழ்வாக கடந்த மாதம் தோப்புத்துறைவாசி Y. நஜிபுதீன் என்பவர், துபாய் சாலையோரம் தான் கண்டு எடுத்த AED 34,800 (இந்திய மதிப்பில் ரூபாய். 7,85,450) தொகையை துபாய் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததற்க்கு துபாய் காவல்துறை அவரை அழைத்து பாராட்டு சான்றிதழ் கொடுத்து அவரை கவுரவப்படுத்தி இருந்தது. அவரின் நேர்மையை தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் அவருக்கு நினைவு கேடயம் வழங்கி , பொன்னாடையும் போர்த்தினர்.

இந்நிகழ்வை சங்கத்தின் துணைத் தலைவர் J. செய்யது அபு ஹக்கீம் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இறுதியாக பொருளாளர் M. முகம்மது ஷா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

08/01/2023

TMAD

08/01/2023

Tmad

08/01/2023

TMAD get together in mamzar

08/01/2023

TMAD get together in mamzar park

 #இன்னா_லில்லாஹி_வ_இன்னா_இலைஹி_ராஜிவூன்தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாயின் உருவாக்கத்தில் 1977 ஆம் ஆண்டில் பங்காற்றிய ...
10/10/2020

#இன்னா_லில்லாஹி_வ_இன்னா_இலைஹி_ராஜிவூன்

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாயின் உருவாக்கத்தில் 1977 ஆம் ஆண்டில் பங்காற்றிய சகோதரர்களில் ஒருவரும் ஆரம்பகால உறுப்பினரும், சங்கம் துவங்கிய 1977 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கடந்த 43 ஆண்டுகளாக பல பொறுப்புகளை வகித்தும் உற்சாகத்தோடு செயலாற்றியும், சிறந்த ஆலோசனைகளை வழங்கியும் வந்த #ஜனாப்_Y_அப்துல்_கரீம் அவர்கள் வல்ல அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று இன்று இறைவனடி சேர்ந்த விபரம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாக்கியது.

வல்ல அல்லாஹ் அவர்களின் பிழை பொறுத்து சிறந்த மறுமை வாழ்வை கொடுத்து ஜன்னத்துள் பிர்தௌஸ் என்ற சுவனத்தை தந்தருளவும், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்திடவும், துஆ செய்கிறோம்.

#தலைவர்_செயலாளர்_நிர்வாகிகள்_மற்றும்_உறுப்பினர்கள்
#தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_துபாய்

 #தோப்புத்துறை_அன்னை_ஃபாத்திமா_பெண்கள்_அரபிக்_கல்லூரி_மற்றும்_வேதாரண்யம்_வள்ளலார்_தர்மச்சாலை இணைந்து நடத்திய  #நிலவேம்பு...
17/11/2019

#தோப்புத்துறை_அன்னை_ஃபாத்திமா_பெண்கள்_அரபிக்_கல்லூரி_மற்றும்_வேதாரண்யம்_வள்ளலார்_தர்மச்சாலை இணைந்து நடத்திய #நிலவேம்பு_குடிநீர்_மற்றும்_நிலவேம்பு_செடிகள்_வழங்கும்_நிகழ்ச்சி
16-11-2019 அன்று நமது ஜமாத் மன்ற தலைவர்
ஜனாப் A.R.ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

நமது கல்லூரி முதல்வர் K.M. ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் இறைவசனம் ஓதி தொடங்கிவைத்தார். கல்லூரியின் தலைவர் M.J. அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நமது கல்லூரி செயலாளர், பொருளாளர் & நிர்வாகிகள், வேதாரண்யம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் மற்றும் தோப்புத்துறை Dr. ஜி. செய்யது சுல்தான் பீவி BSMS ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நமதூர் ஜமாத்தார்கள், ஆரிபா குழுமத் தலைவர் M. சுல்தானுல் ஆரிபின் மற்றும் துணை காவல்துறை கண்காணிப்பாளர்
A. சபியுல்லா IPS அவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் நமதூர் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் அருந்தியும் பெற்றுக்கொண்டும் சென்றார்கள். வேதாரண்யம் தமிழ் தூதன் நன்றி கூறினார்.

#குறிப்பு: நிலவேம்பு குடிநீர் விநியோகம் முடிந்த பிறகும் மக்கள் ஆர்வமாக வந்து கொண்டு இருந்ததால் இன்ஷா அல்லா மீண்டும் வரும் நாட்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க முடிவுசெய்துள்ளோம்.

நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அர...
05/06/2019

நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்

 #ரமலான்_இஃப்தார்_அழைப்பு🌙அமீரகவாழ் தோப்புத்துறையின் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கடந்த வருடங...
07/05/2019

#ரமலான்_இஃப்தார்_அழைப்பு🌙

அமீரகவாழ் தோப்புத்துறையின் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த வருடங்களைப்போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் நமதூர் மக்கள் ஒன்று கூடி மகிழக்கூடிய நமது
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய் நடத்தும் 8 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.05.2019 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிமுதல் துபாய் தேராவில் அல்முத்தீனா Thumbay Hospital அருகிலுள்ள GRAND EXCELSIOR ஹோட்டலில் நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர்களுடன் இந்நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,
#தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_துபாய்

Address

Al Ajman

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 06:00 - 00:00
Saturday 06:00 - 00:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-துபாய் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-துபாய்:

Share