25/07/2018
ஒரு புகைப்பட கலைஞனின் வேண்டுகோள்...
அன்பு நண்பர்களே
தங்கள் நண்பர் அல்லது உறவினர் திருமணம் மற்றும் இதர சுபகாரியங்கள் என்றென்றும் திரும்பி பார்க்க உதவுவீர்கள் தானே,
01. உங்கள் மொபைலில் வேண்டும் என்கின்ற அளவிற்கு படமெடுங்கள். படமெடுப்பதற்காகவே வரவழைக்கப்பட்ட எங்களை போன்ற ஒளிப்படக் கலைஞருக்கு தொந்தரவில்லாமல். நீங்கள் படமெடுத்தாலும் எடுக்காவிட்டாலும் யாரும் கேட்கபோவதில்லை.
நாங்கள் பதிலளிக்க வேண்டிய இடத்திலுள்ளோம். சாரி என்று நீங்கள் சொன்னாலும் உங்கள் இடையூறால் தவறவிட்ட அந்த நொடி உணர்வை மீண்டும் எடுக்க முடியாது.
02. மண்டபத்தில் உள்ளவர்கள் நாங்கள் மறைப்பதாக குறைகூறுவர், ஆனால் நாங்கள் நல்ல கோணம் கிடைக்க குறுக்கம் நெடுக்குமாக போய்தான் ஆகவேண்டும், உண்மையில் நீங்கள் நின்று படம் எடுப்பது தான் பிரச்சனை, ஆனால் உங்களை சொல்லாமல் எங்களை குறைக்கூறுவர்.
03.தங்களது ஈ மெயில் முகவரி தந்தால் நாங்களே தங்கள் படங்களை அனுப்புவோம், எங்கள் வேலையை பாதிக்கும் வண்ணம் தங்கள் மொபைலில் எடுக்க சொல்வது எங்களுக்கு பெரிய சோதனை.
04. கேக் வெட்டும் போதும் பேப்பர், நுரை இன்னும் பலவற்றை தெளித்து கேக்கையும் வீணாக்குகிறீர்கள்,
பல ஆயிரம் செலவு செய்து வந்த மணமக்கள் மேக்கப் வீணாகிறது, அதை துடைக்க போய் நேரம் வீணாகிறது.
எங்களது கேமிராவில் பட்டால் பல அயிரம் பிராங்குகள் வீணாகும் எனவே பயந்தே அதை படமெடுக்கிறோம், இது தேவையா?
05. நீங்கள் யார் யாருடன் படமெடுத்து கொள்ள விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு மேடை ஏறுங்கள், அங்கு வந்த பின் ஒவ்வொருவராக அழைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
06. நல்ல கலைஞன் என்றுமே சமுக விரோத செயல் செய்யமாட்டான். தயவுசெய்து உங்கள் உடைகளை சரி செய்த பின்பே மேடை ஏறுங்கள், பிறகு தவறாக எடுத்தோம் என எங்களை குறைகூறாதீர்கள்.
07. இப்பொதுதெல்லாம் முந்தானையை மாற்றி கட்டுவது பழக்கமாகிவிட்டது,
நீங்கள் சடங்குகள் செய்யும் போது வலதுபுறமும் இடதுபுறமும் நாங்கள் மாறக்காரணம், தவறான கோணத்தில் அந்த புகைப்படம் அமைந்து விட கூடாது என்பதாலேயே,
கொஞ்சம் சிந்தித்து ஒத்துழையுங்கள்.
08. இது என்ன கேமிரா? இது என்ன லென்ஸ், ஏன் அந்த கேமரா அந்த லென்ஸ் போடவில்லை? என நிகழ்ச்சியன்று வந்து கேள்வி கேட்காதீர்கள். உண்மையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் முகூர்த்தம் இல்லாத நாட்களில் முன்னறிவிப்போடு வந்து கேளுங்கள். தகவல் தர கடமைபட்டுள்ளோம். கூகுளில் நீங்கள் பார்த்த விசயங்களுக்கு பதில் தர இது நேரமில்லை, மேலும் ஒரு நல்ல பேனா உன்னதமான கட்டுரையைத் தராது என்பதும், அதிக விலையுள்ள உளி நல்ல சிற்பங்களைத் தாராது என்பது போல் நீங்கள் எங்கோ பார்த்த கேமிரா நல்ல படத்தை தராது, கலைஞனே இங்கு படைப்பாளி. கருவிகள் அவனுக்கு வேலையை எளிதாக்கும் அவ்வளவே.
யாரும் வருவதற்கு முன்பே இன்னும் சொல்லபோனால் மணமக்கள் வீட்டார் எழும் முன்னரே மண்டபம் வந்து எல்லாரும் வந்து சென்ற பின்பு செல்லும் நாங்கள் உங்கள் நிகழ்வுகள் நன்றாக பதிவாகி என்றென்றும உங்கள் நினைவுகளில் பசுமையாய் இருக்கவேண்டும் என்றே ஒரே நோக்கோடு மட்டுமே இப்பதிவு. ஒத்துழையுங்கள்.
நன்றி..