02/01/2023
[1/1, PM 10:36] Aru sivagnanam: 26.01.23 வியாழன் அன்று புதுச்சேரி இலாசுப்பேட்டை ,ஸ்ரீவீரபத்திரசாமி ஆலயத்தில் நடைபெறும்,
சிவ அம்மையப்பர் அறக்கட்டளையின் மாபெரும், 11ம் ஆண்டு அம்மையப்பர் ஐம்பெரும் விழாவில் நன்பகல் 2.00மணி அளவில் *கவியரங்கம்* நடைபெற உள்ளது இதில் கலந்துகொள்ள கவிஞர்கள் வரவேற்கப் படுகிறார்கள்
தலைப்பு: "
*பாரம்பரியம் மாறாத பாரதம் "*
கவிதை 16( அடி ) வரிகளுக்கு மிகாமல் அல்லது 64 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் நற்சான்று வழங்கப்படும் கவி அன்பர்கள் தங்கள் இசைவினை முன்கூட்டியே பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் . வாட்சாப் எண் 8667384456 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் தெரியப்படுத்தி பதியவும் .
********
சிவம் ,அறம் சார் விருதுகள்
Aru sivagnanam: *அம்மையப்பர் விருது2023*
1.) *திருவாசகச் செம்மல் :*
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிரய மாதந்தோறும் (அ) வாரந்தோறும் குழு அமைத்து முன்னின்று நடத்துதல் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது 100 நிகழ்ச்சிகள் நடத்தி பாடுவதில் செம்மை பெற்றிருக்க வேண்டும்.
2.) *திருவாச மணி* :
திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் அடியவராக இருந்து 5 ஆண்டுகள் அல்லது 100 முற்றோதல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக 51 தலைப்புகளையும் பாடும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
3) *திருவாசக மாமணி :*
திருவாசக குழு அமைப்பாளராக இருந்து 10 ஆண்டுகள் தொடர்ந்து மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னின்று நடத்துதல் அல்லது 500 முற்றோதுதல் நிகழ்ச்சிகளை நடத்தி இருத்தல் வேண்டும்.
4) *சிவத்தொண்டுச் செம்மல்*
சிவாலயங்களில் முற்றோதல், சிவ விழா நிகழ்ச்சி போன்றவற்றில் தொண்டு பணி, தூய்மைப் பணி, நீர் எடுத்துவந்து தருதல், பூக்கட்டி தருதல், பந்தல் நடுதல் போன்ற உதவி வேலைகள்இ பரிமாறுதல், கூட்டிப் பெருக்குதல், பூசை ஆயத்த உதவிசெய்தல், (அபிஷேக) திருமுழுக்கு உதவி, என்று குறைந்தது 5 வருடம் ஊதியம் வாங்காமல் அல்லது சொற்ப உதவித்தொகையில் அர்ப்பணிப்புடன் செய்திருக்க வேண்டும்.
5) *சிவப்பணிச் செம்மல்*
சிவ சம்பந்தப்பட்ட சைவ பாட வகுப்பு ஏற்பாடு செய்தல், நடத்துதல், சிவாலயம் புதுப்பித்து அமைத்தல் , உதவுதல், (உடல், பொருள்) புதிய சிவாலயம் அமைத்தல் சிவ விழாக்கள் நடத்துதல் போன்றவற்றில் குறைந்தது சிற்றாலயம் 5. பேராலயம் 1 ஆலயக் குடமுழுக்கு
5 ஆண்டுகள் அல்லது 25 நிகழ்ச்சிகள் தான்அ முன்னின்று நடத்துதல் போன்ற சிவப்பணிகளை செய்பவர்கள்.
6) *அறப்பணிச்செம்மல்*
5 ஆலயங்களுக்கு பேருதவி அன்னதானம், ஆடை தானம், பொன் தானம், கோ தானம், தன தானம், நில தானம் செய்தவர்கள் போன்றவை. மற்ற 32 அறங்கள் செய்தல்.
*7.உழவாரப்பணிச் செம்மல்*
அடியார்களை ஒருங்கிணைத்து
5ஆண்டுகள் சிவாலயங்களுக்கு உழவாரப்பணி செய்தல் அல்லது
25 ஆலயங்கள் உழவாரப்பணி செய்தல் .
8) *கலைச்செம்மல்* : (கலைப்புரிவு)
இயல் இசை, நாடகம், ஒப்பனை, ஓவியம், நடனம், நாடகம் பாடல், ஆடல் போன்ற கலைத் துறையில் சிவ விழாக்கள், சிவ நிகழ்ச்சிகளுக்கு (இலவசமாக) கலைச் சேவை செய்து வருபவர்கள் (சிவசாராத கலைஞர்களுக்கு நாம் தருவதில்லை) வேற்று சமயத்தவராக இருந்தாலும் சிவம் சார்ந்த கலைப்பணி ஆற்றி இருப்பின் தகுதி உடையவர்களை சிவம் சார்ந்த நூல்கள் வெளியிடுபவர்கள். குறைந்தது 5 நூல்கள் வெளியிட்டிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் - கலைப்பணி ஆற்றி இருக்க வேண்டும்.
8) *மாணவக் கலைச்செம்மல்* (துறை)
மாணவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் போட்டி இல்லாமல் ஆலய விழாக்களில் கலந்து கொண்டு பங்காற்றுதல். சிவம் சார்ந்த போட்டிகளில்கலந்து பரிசுபெற்றிருத்தல். போன்றவர்களுக்கு அவர்கள் துறைகளைக் குறிப்பிட்டு அவார்டு வழங்கப்படும் .
*ஆசிரியச் செம்மல்* :
இருபது ஆண்டுகள் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் சிறப்பாகச் செயல்புரிதல் - மாணவர்களை மாநில அளவில் சாதிக்கும் படி போதிப்பவர்கள் , போன்ற ஆசிரியர்கள்களுக்கு
தற்போது பயிலும் மாணவர்கள் இரண்டு வகுப்புகளில் இருந்து 5 பேர் அல்லது முன்னாள் மாணவர்கள் குறைந்தது 3 பேர் தங்கள் ஆசிரியரின் சீரியப்பணி குறித்து 20 வரிகள் எழுதி விண்ணப்பிக்கலாம்.
சக ஆசிரியர்கள் உடன் பணியாற்றும் பணியாற்றிய சிறந்த ஆசிரியர்களுக்கு அவர் ஆற்றிய பணி சிறப்பு குறித்து 20 வரிகள் எழுதி பரிந்துரை செய்யலாம்.
விண்ணப்பம் செய்து தகுதி உடையவர் விருது பெறலாம் ! அம்மையப்பர் விருது2023*
யார்வேண்டுமானாலும் தங்களால் நன்கு அறியப்பட்டவர் எனில் தங்கள் விவரத்தோடு பரிந்துறை செய்யலாம் !
அம்மையப்பர் குழுமத்தில் உள்ளவர்களாகவோ அல்லது படைப்பாளர் கலைஞர் குழு, அம்மையப்பர் சிவப்பணி குழு, அம்மையப்பர் வழிபாட்டுக்குழு ஏதாவது ஒன்றில் தற்காலிக, அல்லது தொடர் உறுப்பினர், நிரந்தர உறுப்பினராக இருத்தல் நன்று . தற்காலிக உறுப்பினராகவும் சேர்ந்து கொள்ளலாம். அம்மையப்பர் விருதுகளுக்கு பரிந்துரை
விண்ணப்பம் அனுப்புவர் அனைவருக்கும் விருது வழங்க உத்திரவாதமில்லை!
உண்மை தன்மை இல்லை என்றாலும்,
குழப்பம் இருந்தாலும்,
அவை நன்கு ஆய்ந்த பிறகு குறை இருந்தால் நிராகரிக்கப்படலாம் பரிந்துறைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.01.23
விருதாளர் குழுவின் முடிவே இறுதியானது. !
தொடர்புக்கு :8667384456
சிவப்பணிகளுக்கு உதவமுன்வரும் சிவ சீராளர்கள் phonpe 8667384456,என்ற எண்ணிற்கும் gpey 9442069956 என்ற எண்ணிற்கும் அனுப்பலாம்
*ஒரே ஒரு ரூபாய் அனுப்பினும் அது சிவ கணக்காகும்* ! வாழ்த்துகள் .
உங்களால் ஒருவருக்காவது பலன் கிடைக்கலாம் ஆதலால் இதனை மற்றவர்க்குப் பகிரவும் !
தமிழ் மாணவர் விருதுகள் :-
Aru sivagnanam: *அம்மையப்பர் விருது 2023
*மாணவர் தமிழ்மணி** *விருது*
10, 11, 12 கல்லூரி. மாணவர்கள் தங்களின் தமிழ்ப் பாடத்தில் அரசுத் தேர்வில் 90 முதல் 95 வரை எடுத்தவர்களுக்கு *மாணவர். தமிழ்மணி* என்ற பட்டம் வழங்கி பெருமைப்படுத்தப்படுகிறது.
*மாணவர் தமிழ்மாமணி*
மாணவர்கள் 10, 11, 12, கல்லூரிகளில் தமிழ் பாடத்தில் 96 முதல் 100 வரை எடுத்த மாணவர்களுக்கு *மாணவர் தமிழ்மாமணி*
என்ற பட்டம் அளித்து பெருமைப்படுத்தப்படுகிறது.
*மாணவர் கலைமணி விருது :*
மழலை நிலை (LKG) - ஆரம்ப நிலை (1 - 5) - நடுநிலை (6 - 8) - உயர்நிலை (9 - 10) -
மேல்நிலை (11 - 12) இளங்கலை (UG Degree, Diploma), முதுகலை (UG Degree, Courses), ஆய்வுநிலை (M.Phil., Ph.d.,)
மேற்படி நிலைகளில் உள்ளவர்கள் (பேச்சு, கவிதை, ஒப்புவித்தல், கட்டுரை, தனி நடிப்பு, நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புறக் கலை, எனவும், தனித்தனி கருவிகள், வாய்ப்பாட்டு, சிறுகதை, கதை ) என எந்த தலைப்புகளிலும் விண்ணப்பம் செய்து சான்றிதழ் (அ) விருது பெறலாம் ,
சாதனைச் சான்றிதழ் அல்லது விருது பெற வேண்டுமானால் - உதாரணம் பேச்சு என்றால் பேச்சில் - ஏற்கனவே சாதனை (10 சான்றிதழ்) செய்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ்களை தெளிவாக போட்டோ எடுத்து அனுப்பி விண்ணப்பதாரரின் பயோடேட்டாவுடன் விண்ணப்பிக்க வேண்டும்
மழலைநிலை :-(KG)
ஆரம்பநிலை:- (1-5 வகுப்புகள்),
நடுநிலை:-( 6-8 வகுப்புகள்),
உயர்நிலை:-(9-10 வகுப்புகள் ),
மேல்நிலை 11-12 வகுப்புகள் ),
இளநிலை :-( கல்லூரி UG ),
முதுநிலை:- கல்லூரி PG),
ஆய்வுநிலை ( phd ),
அந்த அந்த நிலையில் குறிப்பிட்ட போட்டிகளில் பரிசு அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். திறமையை நிருபிக்க அதன் போட்டோ காப்பியை இணைக்க வேண்டும் . அந்த அந்த துறையில் (ஒரு நிகழ்ச்சியை மேடையில் செய்யச் சொல்லாம் செய்துகாட்ட தயாராக இருக்கவும்)
*மாணவர் கலைமாமணி* :
மேற்படி நிலைகளில் உள்ளவர்கள் மேற் குறிப்பிட்ட பிரிவில் அதே நிலையில் 5க்கும் மேற்பட்ட சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும்!சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்,
உங்கள் சான்றுகள் பிற்காலத்தில் ஆய்வுக்கு உரியது என்பதால் அவை பாதுகாக்கப்படலாம் அல்லது அவற்றை நகல் எடுத்து பாதுகாக்கப்படும் அவற்றில் பிழை இருப்பின் - தகுதி நீக்கம் செய்யப்படும். என்பதையும், தெரிந்தவர் என்றோ, உயர்பதவியில் உள்ளவர் என்றோ யாருக்கும் தகுதியில்லாமல் பட்டம்அல்லது விருது வழங்கப் படமாட்டாது. என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். பதிவுக்கட்டணம் ₹100 ரூபாய் மட்டும் 8667384456 g pay அல்லது
9442069956 phonepe அல்லது g pay
செய்து தவலை 8667384456 என்ற எண்ணிற்கு வாட்சாப் புலனம் மூலம் பகிர்ந்து உறுதி செய்துகொள்ளவும் எந்த்த தகவலும் வாட்சாப் மூலம் மட்டுமே ! பேசவேண்டுமானால் மாலை 8 மணிமுதல் 10.30 மணிக்குள் தொடர்பு கொள்ளவும் . தவறு இருக்கும் சூழலில் அதை நிராகரித்தப்பின் பதிவுக்கட்டணம் திருப்பிஅளிக்க இயலாது! எம்முடிவும் விருது விழா குழுவின்முடிவே இறுதியானது ! மாணவர்கள் மேலும் பல சாதணைபடைக்க வாழ்த்துகள் !
அம்மையப்பர் விழாவில் .
காலை 7.30 க்கு வேள்வி வழிபாட்டில் கலந்துகொள்ள எவ்விதக் கட்டணமும் இல்லை! குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளவும் !
தன்னார்வலராக ஒருநாள் சேவை செய்ய விரும்புபவர் சேவை செய்யலாம் அவர்களுக்குச் சேவைக்கான சான்று வழங்கப்படும் நன்றி! வாழ்த்துகள் *நமசிவாயவே ஞானமும் கல்வியும்*!