Rj Krish

Contact the business

Rj Krish Radio Personality

10/09/2026

✈️🎊The Grand Opening of Errances Holidays

🤷 அதிகமான மனஅழுத்தம் (Stress) கண்களுக்கு தெரியாது… ஆனால் அதன் விளைவுகள் மிகவும் கவலைக்குரியது…மனஅழுத்தம் என்பது வெறும் “...
24/02/2026

🤷 அதிகமான மனஅழுத்தம் (Stress) கண்களுக்கு தெரியாது… ஆனால் அதன் விளைவுகள் மிகவும் கவலைக்குரியது…

மனஅழுத்தம் என்பது வெறும் “கவலைப்படுவது” மட்டுமல்ல.

உடல் ஒரு ஆபத்து இருப்பதாக உணரும்போது — அது வேலை பற்றிய கவலையாக இருந்தாலும், வீட்டுச் சிக்கலாக இருந்தாலும் — உடலில் ஒரு அவசர அலாரம் இயங்கத் தொடங்கும்.

அந்த அலாரம் காரணமாக:
👉 இதயம் வேகமாக துடிக்கும்
👉 தசைகள் இறுக்கமாகும்
👉 உடல் கோர்டிசோல் (Cortisol) மற்றும் அட்ரினலின் (Adrenaline) போன்ற ஹார்மோன்களை வெளியிடும்

இவை உடலை உடனடி செயலுக்கு தயார் செய்யும்.

இது சில நேரம் மட்டுமே இருந்தால் நல்லது.
உண்மையில் மனஅழுத்தம் முழுவதும் கெட்டது அல்ல — சில அளவில் அது தேவையானதே.

ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா?
அந்த “அலாரம்” ஒருபோதும் ஆஃப் ஆகாமல் இருந்தால் 😰…

நாம் தினமும் பதட்டத்திலேயே வாழ்ந்தால், உடல் மெதுவாக சோர்ந்து பாதிக்கப்படும். அப்போது தான் பல பிரச்சனைகள் தொடங்கும்.

👉 கோர்டிசோல் அதிகமானால், உடலில் சர்க்கரை அளவு உயரலாம் — உடல் அவசர ஆற்றலை உருவாக்குவதால்.
👉 டிரைகிளிசரைட்ஸ் மற்றும் ரத்த அழுத்தம் கூட அதிகரிக்கலாம் — இதயம் அதிகமாக வேலை செய்வதால்.
👉 தன்னறியாமல் பற்களை இறுக்கும் பழக்கம் (Bruxism)
👉 தசை வலி, தலைவலி
👉 செரிமானம் பாதிப்பு — உடல் “உயிர் காப்பது” முக்கியம் என்று நினைத்து செரிமானத்தை குறைக்கும்
👉 நீண்டகால மனஅழுத்தம் இருந்தால் முடி உதிர்வும் அதிகரிக்கலாம் 😟

மேலும்…

மூளை தொடர்ந்து அவசர நிலையில் இருந்தால் அது சோர்ந்து விடும்.

👉 மன சோர்வு
👉 கவனம் செலுத்த சிரமம்
👉 மனநிலை மாற்றங்கள்
👉 நன்றாக தூங்க முடியாமை
👉 ஓய்வு எடுத்தாலும் ஓய்வாக உணர முடியாமை

இதன் செய்தி தெளிவானது:
சிறிதளவு மனஅழுத்தம் உதவும்… ஆனால் அதிகமான மனஅழுத்தம் நோய்களை உண்டாக்கும்.

ஆழமாக சுவாசிப்பது, உடலை இயக்குவது, போதுமான ஓய்வு எடுப்பது, நம்முடைய உணர்வுகளை பகிர்ந்து பேசுவது — இவை எல்லாம் ஒரு ஆடம்பரம் அல்ல…
உடலின் இயல்பான சமநிலையை மீண்டும் பெற வேண்டிய அவசியமானவை 🌿✨

எப்போதும் நான் சொல்லுவது போல —
மனஅழுத்தத்தை முற்றிலும் தவிர்ப்பது முக்கியமல்ல… அதை சரியாக நிர்வகிக்க கற்றுக்கொள்வதே முக்கியம்.









சிவாஜி படத்தில் ரஜினி ஒற்றை ரூபாயை முதலீடாக வைத்து பலகோடி ரூபாய் சம்பாதித்து காட்டுவார். அதே போன்ற சம்பவம் கனடாவில் நடந்...
23/01/2026

சிவாஜி படத்தில் ரஜினி ஒற்றை ரூபாயை முதலீடாக வைத்து பலகோடி ரூபாய் சம்பாதித்து காட்டுவார். அதே போன்ற சம்பவம் கனடாவில் நடந்துள்ளது

கைல் மெக்டாலன்ட், வயது 26, கனடாவின் மான்ட்ரியால் நகரில் வசித்து வருகிறார். அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு சவால் விட்டார். "நாம் குப்பை என நினைப்பது இன்னொருவருக்கு வைரமாக இருக்கும்" என. பேசிவிட்டு தன் மேஜை மேலே இருந்த ஒரு சிகப்பு க்ளிப்பை பார்த்தார். "இந்த க்ளிப் பார்க்க அற்பமா இருக்கு. ஆனால் இதை நான் இப்போது டிரேடிங் செய்கிறேன். காசுக்க்கு அல்ல, பதிலுக்கு உங்களிடம் இருக்கும் ஒரு பொருளை நீங்கள் கொடுத்துவிட்டு இந்த க்ளிப்பை வாங்கிக்கொள்ளலாம்"

வந்த ஆஃபர்களில் மீன் மாதிரி வடிவில் இருக்கும் பேனாவை தேர்ந்தெடுத்தார் கைல். அடுத்து அந்த பேனாவை டிரேடிஙுக்கு விட்டார். அதற்கு பதில் ஒரு கதவுக்கு மாட்டும் டோர் நாப் கிடைத்தது. அதை டிரேடிங்குக்கு விடுகையில் ஒரு ஸ்டவ் கிடைத்தது. ஸ்டவ்வை டிரேடிங்குக்கு விடுகையில் ஒரு நூறுவாட்ஸ் ஜெனெரேட்டர் கிடைத்தது.

ஜெனெரேட்டருக்கு ஒரு பனி மேல் ஓடும் ஸ்னோமொபைல் கிடைத்தது. அதற்கு ஒரு பீப்பாய்

பீப்பாய் அழகாக இருக்கு என சொல்லி ஒருவர் அதை ஒரு கண்னாடியால் செய்த க்ளோபை கொடுத்து வாங்கினார்

கண்னாடி க்ளோபை டிரேடிங் விட்டபோது ரேடியோ ஜாக்கி ஒருவர் போனில் அழைத்தார். "நான் அழகா இருக்கும் கண்ணாடி க்ளோபை சேகரிக்கும் வழக்கம் உள்ளவன். எனக்கு நடிகர் கார்பின் பென்சனின் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை அவரிடம் பேசி உனக்கு பெற்று தருகிறேன் க்ளோபை கொடு"

கார்பின் பென்சனும் விவரத்தை கேட்டுவிட்டு "படத்துக்கும் இது நல்ல விளம்பரமா இருக்கும். எனக்கு ஓக்கே தான். நீ ரேடியோவில் செய்தியை போடு. நீ சோசியல் மீடியாவில் செய்தியை போடு" என்றார்

"ஆனால் எனக்கு வரும் வாய்ப்பை நான் டிரேடிங் தான் செய்வேன். உங்க படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏலம் விடுவேன். அதில் ஜெயிப்பவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கணும்" என்றார் கைல். "அதுவும் விளம்பர்ம் தான் என்பதால் எனக்கு ஓகேதான். ஆனால் இது ஒரு சின்ன ரோல். பெருசா சம்பளம் எதுவும் வராது" என்றார் கார்பின் பென்சன். அதையும் தான் பார்க்கலாம் என சொல்லி அதை ஏலம் விட்டார் கார்பின்

அவருக்கு கிப்ளிங் எனும் 1100 மக்கள் தொகை கொண்ட சிற்றூரில் இருந்து ஒரு ஆஃபர் வந்தது

"எங்க்ள் ஊரில் ஒரு பண்ணையுடன் சேர்ந்த வீடு உள்ளது. யாருக்கும் சொந்தமில்லாத அனாதை சொத்து. எங்கள் ஊருக்கு அந்த படவாய்ப்பை கொடுத்தால், நாங்கள் பண்ணையை கொடுக்கிறொம். படவாய்ப்பை எங்கள் ஊருக்குள் ஏலம் விட்டுக்கறோம்"

சரி என சொல்லி படவாய்ப்பை கொடுத்த கைலுக்கு அந்த பண்ணையும், வீடும், தோட்டமும் மிகவும் பிடித்துவிட்டது

"இனிமேல் இதை டிரேடிங் செய்ய நான் தயாராக இல்லை. நான் இன்றுமுதல் பண்ணையார்" என சொல்லிவிட்டார்

ஆக ஒரு சின்ன க்ளிப், ஒரே வருடத்தில் அவருக்கு ஒரு பண்ணையை வாங்கிக்கொடுத்து பண்ணையார் ஆக்கிவிட்டது

ஒரு மனிதனின் குப்பை, இன்னொருவனின் வைரம்

~ நி.செல்வன்

 #இவ்வளவுதான்ங்க  #வாழ்க்கை...   திரைப்படத்தில், டொம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில் வ...
21/12/2025

#இவ்வளவுதான்ங்க #வாழ்க்கை...

திரைப்படத்தில், டொம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.

தனது சகாக்கள் அனைவரும் விபத்தில் இறந்து போக, டொம் ஹாங்கஸ் மாத்திரம் அதிஷ்டவசமாக உயிர் தப்புகிறார். கடல் அவரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாத ஒரு தொலைதூர தீவில் கொண்டு வந்து
கரை ஒதுக்குகிறது.

ஆம்... யாருமில்லாத தீவு.... வாழ்வதா...? அல்லது சாவுக்கு சரணடைவதா? என்ற மனப் போராட்டம் ஹாங்கிஸிடம் ஆரம்பிக்கிறது. சாவுக்கு சரணடைய மறுக்கிறார். தன் மனைவி, பிள்ளைகள் நண்பர்கள் மற்றும் தான் வாழ்ந்த உலகம் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் பிறக்கிறது.

உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. ஆனால் மனித நடமாட்டம் அற்ற தீவில் எப்படி உயிர் பிழைத்து வாழ்வது...? மரங்களில் ஏறி இருந்த கனிகளை சாப்பிடுகிறார். கடலில் இறங்கி கிடைத்த மீன்களை பிடித்து பசியை போக்குகிறார்.

தன் பார்ஸிஸ் இருந்த மனைவி, பிள்ளை குட்டிகளின் படத்தை எடுத்து அவ்வப்போது பார்த்துக்கொள்கிறார். ஒரு கைப்பந்தில் ஒரு முகத்தை வரைந்து அதற்கு "வில்சன்" என்று பெயரிட்டு அதனை தனது உற்ற நண்பனாக்கி, அவருடன் பேசி மகிழ்கிறார்.

அங்கே மலை உச்சியில் ஏறி ஒரு கொடியை நாட்டுகிறார். நெருப்பை மூட்டிப் பார்க்கிறார்
வருகின்ற, போகின்ற கப்பல்கள் அவரை அடையாளம் கண்டு, அவரை காக்க வரும் என்று நம்புகிறார்.

நாட்கள் உருண்டோடுகின்றன. இப்படியே அங்கே சில வருடங்களைக் கழிக்கிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்க வில்லை. அன்பு மனைவி, பாசமான பிள்ளைகள், உயிர் நண்பர்கள் மறு பக்கத்தில் தனக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது.

இந்த நம்பிக்கை அவரை உயிர் வாழ ஊக்குவிக்கிறது. கடைசியாக பல நாள் பாடுபட்டு மரக்கட்டைகளால் ஒரு படகு செய்கிறார். அதில் ஏறி நம்பிக்கையோடு கடலில் குதிக்கிறார். கடல் அலைகள் தரும் மரண பயத்தை மீறிப் பயணிக்கிறார். பிறகு அதிஷ்டவசமாக வந்த ஒரு கப்பல் அவரை இனங்கண்டு பாதுகாத்து மீட்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்த உலகம் நோக்கிச் செல்கிறார்.

ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவரது அன்பு மனைவி கொஞ்ச காலம் அழுது விட்டு, அவர் இறந்ததாக நினைத்து மறு மணம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார். அவரது பிள்ளைளும், நண்பர்களும் அவர் இறந்ததாக நினைத்து சில நாட்கள் துக்கம் அனுஷ்டித்துவிட்டு, மறந்து வாழ்வதைப் பார்க்கிறார்.

யாரும் அவரை அங்கே தேடிக்கொண்டோ, நினைத்துக் கொண்டோ இருக்கவில்லை.
உலகம் அதன்பாட்டில் ஆரவாரமின்றி
ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கிறார்...!

◼ நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் பல்லாண்டுகளாக படும் கஷ்டங்கள்
இன்னல்கள், பலவற்றுக்கும், இவ்வளவு பாடுபடத் தேவையில்லை என்பதை ஒரு நாள் தெரிந்து கொள்வீர்கள்.

◼ நீங்கள் உலகை விட்டு மறைந்த பிறகு உங்கள் முயற்சிகள் பலவற்றுக்கு மதிப்போ மரியாதையோ இருக்காது.

◼ முதலில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் ஆத்ம நலனுக்காகவும் வாழப் பழகுங்கள்.

◼ நீங்கள் மறைந்த பிறகு இந்த உலகம் உங்களுக்காக அதன் ஓட்டத்தை நிறுத்தாது...
Copied...

🥺💔என் ராஜீவை என்னிடம் திருப்பிக் கொடுங்கள் நான் திரும்பி போகிறேன், உங்களால் முடியாது எனில் என்னையும்  இந்த மண்ணில் கலந்த...
14/12/2025

🥺💔என் ராஜீவை என்னிடம் திருப்பிக் கொடுங்கள் நான் திரும்பி போகிறேன், உங்களால் முடியாது எனில் என்னையும் இந்த மண்ணில் கலந்துபோகவிடுங்கள், நீங்கள் கவனித்தது உண்டா? அவரின் பரந்த நெற்றி, ஆழமான கண்கள், உயரம் மற்றும் புன்னகை. நானும் முதன் முறையாக அவரைப் பார்த்தபோது, அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்,

நண்பர்களிடம் கேட்டேன். யார் இந்த அழகான இளைஞன், என்ன ஒரு அழகு! பேரழகன் என்றேன், நண்பர்கள் சொன்னார்கள் அவர் ஒரு இந்தியர் என்று, "பண்டிட் நேருவின்" குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று, நான் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்
நேரு குடும்பத்தைச் சேர்ந்த பையனை,

சில நாட்களுக்கு பிறகு பல்கலைகழக உணவகம் சென்றேன். அவர் தன் நண்பர்களுடன் இருந்தார், அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன், என் கண்களை உயர்த்தியபோது, அவர் என்னைப் பார்த்தார், கண்கள் ஒரு கணம் சந்தித்தன, இருவரும் தயங்கினோம்,
என் கண்களை எடுத்தேன், ஆனால் என் இதயம் வேகமாக துடித்தது,

மறுநாள் நான் மதிய உணவுக்கு அங்கு சென்றபோது, அவர் அங்கேயே இருந்தார். அது கண்டதும் காதல். அந்த நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது. அது சொர்க்கமாக இருந்தது. நாங்கள் ஒன்றாக ஹேங்அவுட் செய்வோம், ஆறுகள் வழியாக,
காரில் நீண்ட டிரைவ்களுக்கு செல்வோம். தெருக்களில் கைகோர்த்து நடப்பது, திரைப்படம் பார்ப்பது. நாங்கள் ஒருவருக்கொருவர் காதலை முன்மொழிந்தோமா என்பது எனக்கு நினைவில் இல்லை. தேவை இல்லை, எல்லாம் இயற்கையானது, நாங்கள் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டோம்.

நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம் நிரந்தரமாக. அவரது தாயார் பிரதமரானார். அவர் அம்மா இங்கிலாந்து வந்ததும், ராஜீவ் அவர் அம்மாவை சந்தித்தார். திருமண அனுமதி கேட்டோம். இந்தியாவுக்கு வரச் சொன்னார்.

இந்தியா என்ன? உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் நான் ராஜீவுடன் வாழ தயாராக இருந்தேன். அதனால் இந்தியா வந்தேன். நேருஜியால் நெய்யப்பட்ட, காதியால் செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற புடவை, தனது திருமணத்தில் அணிந்த அந்த சேலையை எனக்கு எங்கள் திருமணத்தில் அணிய பரிசாக தந்தார் இந்திராஜி. அதை அணிந்ததன் மூலம், நான் அந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறினேன். எனது வேண்டுதலை வாழ்க்கையை இறைவன் வண்ணங்களால் நிரப்பியிருந்தார். நான் ராஜீவுக்கு சொந்தம், ராஜீவ் எனக்கு சொந்தம்,

நான் இந்த இடத்தை இந்த மண்ணை சேர்ந்தவள் என புரிந்துகொண்டேன்.
நாட்கள் சிறகடித்து பறந்தன. ராஜீவின் தம்பி மறைந்துவிட்டார். இந்திராஜிக்கு ஆதரவு தேவைப்பட்டது. ராஜீவ் அரசியலுக்கு வரத் தொடங்கினார். எனக்கு பிடிக்கவில்லை, வேண்டாம் என்று சொன்னேன். எல்லா முயற்சியும் எடுத்தேன், ஆனால் இந்தியாவில், தாய்க்கு முன்னால் மனைவியின் சொல் எங்கே எடுபடுகிறது? அவர் அரசியலுக்கு சென்றார். அவர் அப்படி அரசியலுக்கு சென்றபின் என் மீதான அன்பு குறைந்துபோனதாக நான் நினைத்தேன். எனக்கு சொந்தமான ராஜீவை இந்தியா தனக்கும் பங்கு வேண்டுமென வாங்கி கொண்டது.

அவர் மீதான எனது உரிமையின் பங்கு குறைந்தது.
ஒரு நாள் இந்திராஜி வீட்டுக்கு வெளியே சென்றபோது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ஓடி வந்து நான் பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தார்,
அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன்,
அவரது ரத்தத்தில் என் உடைகள் நனைந்து கொண்டே இருந்தன. என் கைகளில் இறந்தார்.

மரணத்தை இவ்வளவு அருகில் பார்த்ததுண்டா? அன்று என் வீட்டில் ஒருவரல்ல இரண்டு பேர் குறைந்தனர். ராஜீவ் முற்றிலும் நாட்டைச்சேர்ந்தவரானார். நான் பொறுத்துக்கொண்டேன், சிரித்தேன், விளையாடினேன்,

எனக்கானவர் என்று யாரை நினைத்தேனோ அவரை இந்திய நாட்டுடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால் எனக்கு என்ன திரும்ப கிடைத்தது? ஒரு நாள் அவரது பிணம் திரும்பி வந்தது. துணியால் மூடப்பட்ட உடல். அவரது சிரித்த, ரோஜா போன்ற முகத்தை கல்லாக மாற்றி திருப்பி தந்தீர்கள்.

அவருடைய கடைசி முகத்தை நான் மறக்க விரும்புகிறேன். அந்த உணவகத்தில் அந்த பர்ஸ்ட் லுக், அவருடன் கழித்த இனிய மாலை பொழுதுகள், அந்த சிரிப்பு. அதைத்தான் நான் நினைவில் கொள்ள விரும்புகிறேன்.

நான் ராஜீவுடன் செலவிட்ட நேரத்தை விட ராஜீவ் இல்லாமல் இந்த நாட்டில் அதிக நாட்களை கழித்திருக்கிறேன். இயந்திரம் போல் நான் வேலை செய்தேன். அதிகாரம் இருக்கும் வரை இந்தியாவின் மரபு சிதையாமல் பார்த்துக் கொண்டேன். இந்த நாட்டிற்கு செழுமையான மிகவும் புகழ்பெற்ற நல்ல தருணங்களை வழங்கி இருக்கிறேன்.

வீட்டையும் நாட்டையும் நன்றாக கவனித்து கொண்டேன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். நான் என் வேலையை செய்துவிட்டேன். ராஜீவுக்கு கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன்.
ஆனால் நீங்கள் என்னைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

வெளிநாட்டவர், பார் கேர்ள், ஜெர்சி மாடு, விதவை, கடத்தல்காரர், உளவாளி.
ஆனால் நான் வருத்தப்படவில்லை. அப்படி சொல்பவரை பார்த்தால் அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன். அவர்களுக்காக நான் வருந்துகிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் கொடுக்கப்படும் முறைகேடுகள் என்னை காயப்படுத்தாது.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கின் கட்டுப்பாடின்றி பேசும் போச்சுகள் காயப்படுத்துமா என்னை? இல்லை, நான் நிச்சயமாக பரிதாபப்படுகிறேன்.

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் நேசித்த ஒருவரின் சடலத்தைப் பார்ப்பது தான் மிகப்பெரிய வலி. அதற்குப் பிறகு வலி இல்லை. மனம் கல்லாக மாறும்.

ஆனால் நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், நிச்சயமாக நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள். இன்றே திரும்பி போகிறேன். ஆனால் திரும்ப ராஜீவை தாருங்கள். அவரோடு நான் போய்விடுகிறேன்.

அவரை திருப்பித் தர முடியாவிட்டால்,
ராஜீவைச் சுற்றி அமைதியாக, இங்கே எங்காவது ஒரு மூலையில் இந்த மண்ணில் கலந்துவிட அனுமதி தாருங்கள். இந்த நாட்டின் மருமகளுக்கு இந்த அளவு உரிமையாவது கிடைக்க வேண்டும்.

(திருமதி. சோனியா காந்தியின் கடிதத்திலிருந்து ஒரு பகுதி!)

The Unreal Realities பதிப்பிலிருந்து..

#அன்னை #சோனியாகாந்தி

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rj Krish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Krish:

Shortcuts

  • Want your business to be the top-listed event planning service?

Share

Nearby event planning services